வணிகம்
WealthTrust Securities நிறுவனம் தனது பிரதான மூலதனக் காப்பினை மேலும் வலுப்படுத்துவதற்காக ரூபா 500 மில்லியன் தொகை ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் (IPO) நடவடிக்கை குறித்து அறிவித்துள்ளது

Nov 27, 2025 - 09:53 AM -

0

WealthTrust Securities நிறுவனம் தனது பிரதான மூலதனக் காப்பினை மேலும் வலுப்படுத்துவதற்காக ரூபா 500 மில்லியன் தொகை ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் (IPO) நடவடிக்கை குறித்து அறிவித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியின் உரிமம் பெற்ற, இலங்கையில் வங்கி அல்லாத, முன்னணி முதன்மை வணிக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற WealthTrust Securities Limited (WTS), தனது வளர்ச்சிப் பயணம் மற்றும் நீண்ட கால அடிப்படையில் மூலதனத்தை பலப்படுத்தும் மூலோபாயம் ஆகியவற்றில் முக்கியமானதொரு மைல்கல்லாக அமையும் வகையில், சாதாரண வாக்குரிமைப் பங்குகளின் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கைத் திட்டம் குறித்து இன்று அறிவித்துள்ளது. 

இந்த ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையின் மூலமாக, பங்கொன்று ரூபா 7.00 என்ற முகப்பெறுமதியில் 71,548,244 சாதாரண வாக்குரிமைப் பங்குகளை வழங்கவுள்ள இந்நிறுவனம், ரூபா 500.8 மில்லியன் நிதியைத் திரட்டவுள்ளது. நிறுவனத்தின் 5.84% பங்குகளாக இவை காணப்படுவதுடன், தனது பிரதான மூலதன தளத்தைப் பலப்படுத்தி, பரிணமித்து வருகின்ற வட்டி வீதச் சூழலில் சந்தை மற்றும் வட்டி வீதம் ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்ளும் திறனை மேம்படுத்துவதே அதன் நோக்கமாகும். நிறுவனத்தை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் முதன்மை மதிப்பீட்டு முறைக்கு ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் விலைப் பெறுமதி 18% உயர்வை வழங்குகின்றது. WTS பங்குகளை கொழும்பு பங்குப் பரிமாற்றச் சந்தையின் திரி சவி சபையில் (Diri Savi Board) நிரற்படுத்துவதற்கான கொள்கை மட்ட அங்கீகாரத்தை கொழும்பு பங்குச் சந்தை வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் அடிப்படையிலான மதிப்பீட்டைப் பிரதிபலிக்கும் வகையில், ரூபா 8.6 பில்லியன் தொகையைக் குறிக்கும் சந்தை மூலதன மதிப்பாக்கத்துடன் நிரற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கைக்கான விண்ணப்பங்கள் 2025 நவம்பர் 24 முதல் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், பங்குகளின் கொள்வனவு நடவடிக்கை 2025 டிசம்பர் 17 முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் விபரங்கள் குறித்த கையேடு மற்றும் விண்ணப்பங்களை www.cse.lk மற்றும் www.wealthtrust.lk வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

முதலீட்டாளர்களாக மாறும் வாய்ப்புள்ளவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிறுவனம் குறித்த கண்ணோட்டத்தை வழங்குவதற்காக, 2025 டிசம்பர் 2 அன்று ஊடக அறிமுக நிகழ்வொன்றை WTS ஒழுங்குபடுத்தியுள்ளது. நிறுவனம், அதன் வரலாறு, மற்றும் எதிர்வரும் ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை குறித்த முக்கிய அம்சங்கள் குறித்த சுருக்கமான அறிமுகம் இந்நிகழ்வில் வழங்கப்படவுள்ளது. பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரொமேஷ் கோமஸ், இவ்வழங்கல் நடவடிக்கை குறித்த முகாமையாளர்கள் மற்றும் நிதியியல் ஆலோசகர்கள், Asia Securities Advisors ஆலோசகர்கள் ஆகியோர் இந்நிகழ்வை வழிநடாத்தவுள்ளனர். இந்த விளக்கமளிப்பு நிகழ்வில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் அனைவரும் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்நிகழ்வு நேரலை வழியாக ஒளிபரப்பப்படவுள்ளது. 

கூட்டாக 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சந்தை நிபுணத்துவத்தைக் கொண்ட, மிகவும் அனுபவம் வாய்ந்த முகாமைத்துவ அணியின் பக்கபலத்துடன், கடந்தகாலங்களில் தொடர்ச்சியான நிதியியல் நெகிழ்திறனையும், செயல்பாட்டு ஒழுக்கத்தையும் WTS காண்பித்து வந்துள்ளது. இந்நிறுவனம் Lanka Rating Agency இடமிருந்து A- (Positive) கடன் தர மதிப்பீட்டை தற்போது பெற்றுள்ளதுடன், வலுவான அத்திவாரங்கள் மற்றும் விவேகம்மிக்க இடர் முகாமைத்துவம் ஆகியவற்றைப் பிரதிபலித்துள்ளது. 

இடம்பெறவுள்ள ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை மூலமாக, கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களை ஆராய்ந்து, தகவல் தொகுப்பை மதிப்பீடு செய்து, WTS ன் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் பங்கேற்பதற்கு பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05