செய்திகள்
நுவரெலியா மற்றும் கண்டியில் மண்சரிவு: 4 பேர் பலி, 4 பேர் மாயம்

Nov 27, 2025 - 10:22 AM -

0

நுவரெலியா மற்றும் கண்டியில் மண்சரிவு: 4 பேர் பலி, 4 பேர் மாயம்

நுவரெலியா, வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார். 

 

இரண்டு வீடுகள் மண்சரிவில் சிக்கியதாலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர். 

 

இதேவேளை, நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக கண்டி மாவட்டத்தில் 4 பேர் காணாமல் போயுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக்க உடவத்த தெரிவித்தார். 

 

உடுதும்பர மற்றும் பஹத்த ஹேவாஹெட்ட ஆகிய பகுதிகளிலிருந்தே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05