Nov 27, 2025 - 10:54 AM -
0
கடுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வித்தியார்த்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் தடுப்புச் சுவரின் ஒரு பகுதி நேற்று (26) இரவு இடிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக, நிந்தவெல ஊடாக கல்கடுவ செல்லும் வீதி முழுமையாகத் தடைப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும், வீதித் தடையை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

