செய்திகள்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

Nov 27, 2025 - 11:17 AM -

0

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. 

இன்று காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது.  

இந்நிலநடுக்கம் காரணமாக இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.  

இது தொடர்பான எதிர்கால அறிவிப்புகளை விழிப்புடன் இருந்து கண்காணிக்குமாறும், ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் மேலதிக தகவல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் மையம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05