Nov 27, 2025 - 01:34 PM -
0
நவம்பர் 13 அன்று இடம்பெற்ற SLIM Brand Excellence Awards 2025 விருதுகள் நிகழ்வில், இவ்வாண்டிற்கான மிகச் சிறந்த வர்த்தகநாமமாக முடிசூடி, அதியுச்ச அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள எலிஃபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம், இலங்கையிலுள்ள புகழ்பூத்த வர்த்தகநாமங்களில் ஒன்று என்ற தனது ஸ்தானத்தை மீண்டும் ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளது. இத்தயாரிப்புப் பிரிவில் அதன் முன்னிலை ஸ்தானம், நுகர்வோர் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள நம்பிக்கை, மற்றும் இலங்கையின் அனைத்து இல்லங்களிலும் காலத்தால் அழியாத அதன் பாரம்பரியச் சிறப்பு ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள வர்த்தகநாமத்திற்கு இந்த அங்கீகாரம் மற்றுமொரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இவ்வாண்டின் மிகச் சிறந்த வர்த்தகநாமம் என்ற உச்ச அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளமைக்குப் புறம்பாக, மேலும் பல பிரிவுகளின் கீழ் மிகச் சிறந்த சாதனைப் பெறுபேறுகளை எலிஃபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம் நிலைநாட்டியுள்ளது. இவ்வாண்டின் மிகச் சிறந்த தயாரிப்பு வர்த்தகநாமம் என்ற பிரிவில் தங்கத்தையும், இவ்வாண்டின் மிகச் சிறந்த உள்நாட்டு வர்த்தகநாமம் என்ற பிரிவில் வெள்ளியையும் அது வென்றுள்ளது. தயாரிப்பின் புத்தாக்க அணுகுமுறை, மூலோபாயரீதியான சந்தைப்படுத்தல் உத்திகள், நுகர்வோருடனான ஈடுபாடு மற்றும் நீண்ட கால அடிப்படையிலான வர்த்தகநாம மதிப்பு என இந்த வர்த்தகநாமத்தின் முழுமையான பலத்தை இந்த மும்முனை வெற்றிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இவ்வெற்றியானது வர்த்தகநாமம் தற்போது சந்தையில் கொண்டுள்ள
உத்வேகத்தை மாத்திரமன்றி, தரத்தை மேம்படுத்தி, அதன் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தி, மற்றும் நாடளாவியரீதியில் நுகர்வோர் மத்தியில் உணர்வுரீதியான பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் மிகவும் சிந்தனைபூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முதலீடுகளின் பலனையும் பிரதிபலிக்கின்றது.
ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய சிறப்பைக் கொண்டுள்ள எலிஃபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம், குடும்பத்தின் குதூகலத் தருணங்களுக்கான நம்பிக்கைமிக்க துணைக்கும், மாசுமறுவற்ற தரத்திற்கும், இத்தயாரிப்புப் பிரிவில் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் புத்தாக்கத்திற்கும் தனித்துவமான நாமமாக தொடர்ந்தும் திகழ்ந்து வருகின்றது. காலத்தால் அழியாத ஈர்ப்பு, தொடர்ந்தும் பேணி வருகின்ற பலாபலன், மற்றும் இலங்கையில் உறைவிக்கப்பட்ட உணவுப்பண்டங்கள் துறையை பரிணமிக்கச் செய்வதில் அதன் முன்னிலை வகிபாகம் ஆகியவற்றுக்குச் சான்றாக, கடந்தகாலங்களில் ஏராளமான விருதுகளை இவ்வர்த்தகநாமம் சம்பாதித்துள்ளது. இவ்வாண்டு SLIM Brand Excellence Awards நிகழ்வில் இது ஈட்டியுள்ள வெற்றி, நாட்டில் மிகவும் நன்மதிப்புப் பெற்றுள்ள மற்றும் அபிமானம் பெற்ற நுகர்வோர் வர்த்தகநாமங்களில் ஒன்று என்ற தனது ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இவ்வெற்றி குறித்து ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுப் பொருட்கள் துறையின் தலைவர் தமிந்த கம்லத் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “எலிஃபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம் இவ்வாண்டு முழுவதும் முன்னெடுத்துள்ள வலுவான, தொடர்ச்சியான, மற்றும் நுகர்வோரை மையமாகக் கொண்ட முயற்சிகளுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள சான்றாக இந்த அங்கீகாரம் காணப்படுகின்றது. தொடர்ச்சியான மேம்பாடு, குறித்த நோக்கம் கொண்ட புத்தாக்கம், மற்றும் நுகர்வோரின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வர்த்தகநாமத்தினை வலுவூட்டுதல் ஆகியவற்றின் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கின்றது. பலாபலன் மற்றும் விளைவு ஆகியவற்றை மேம்படுத்துவதில் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட, கவனமாக சிந்தித்து மேற்கொள்ளப்பட்டுள்ள உழைப்பை எமது அணிகள் முன்னெடுத்துள்ளதுடன், அவர்களுடைய கூட்டு முயற்சிக்கான அங்கீகாரமாக இச்சாதனை காணப்படுகின்றது.”
ஐஸ்கிறீம் தயாரிப்புக்கள் துறையின் தலைவர் சதீஷ் ரத்நாயக்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “தயாரிப்பை வெளிக்கொண்டு வருதல் மற்றும் அதன் தர மட்டங்கள் ஆகியவற்றில் நாம் கடைப்பிடிக்கும் கண்டிப்பான நடைமுறைகளை இச்சாதனை பிரதிபலிக்கின்றது. எமது புத்தாக்கங்கள், மேம்பாடுகள், தீர்மானங்கள் என அனைத்துமே எமது வாடிக்கையாளர்களுக்கு எம்மால் முடிந்து வரை மிகச் சிறந்த அனுபவத்தை வழங்குவதில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இத்தகைய பிரமாண்டமான மேடையில் அங்கீகாரத்தைச் சம்பாதிப்பது, மகத்துவத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எமது அர்ப்பணிப்பு மிகவும் முக்கியமான இடங்களில் எதிரொலிப்பதை உறுதிப்படுத்துகின்றது.”
ஐஸ்கிறீம் தயாரிப்புக்கள் துறையின் சந்தைப்படுத்தலுக்கான தலைமை அதிகாரி சத்துரிகா பொன்சேகா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் குடும்பங்கள் மத்தியில் உணர்வுபூர்வமாக மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ள பிணைப்பே எலிஃபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீமின் பலமாகும். நுகர்வோருக்கு பொருத்தமானவற்றை கட்டியெழுப்பி, அதன் மீதான அவர்களுடைய அபிமானத்தை பெருக்கி, நுண்ணறிவை முன்னிலைப்படுத்திய வர்த்தகநாம செயல்பாடுகளை முன்னெடுப்பதில் நாம் கடந்த ஆண்டில் கவனம் செலுத்தியிருந்தோம்.
இந்த விருதுகள் எமது மூலோபாயத்திற்கான அங்கீகாரமாகக் காணப்படுவதுடன், வர்த்தகநாமத்தை இன்னும் உச்சத்திற்கு இட்டுச்செல்லும் எமது முயற்சிகளையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.”
பரிணமித்து வருகின்ற நுகர்வோரின் வாழ்க்கைமுறைகளை நிறைவேற்றும் வகையில் நுகர்வோருடனான ஈடுபாட்டை ஆழமாக்கி, தனது புத்தாக்க திட்டங்களை விரிவுபடுத்தி, மற்றும் வர்த்தகநாமத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை விரைவுபடுத்தும் திட்டங்களை எலிஃபன்ட் ஹவுஸ் எதிர்காலத்தில் முன்னெடுக்க எண்ணியுள்ளது. நுண்ணறிவை முன்னிலைப்படுத்திய தயாரிப்பு மேம்பாடு, படைப்பாக்கத்திறன் மிக்க வழியில் வர்த்தகநாம ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுடன், இத்தயாரிப்புப் பிரிவில் புதிய தரஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டி, இலங்கையில் குடும்பங்கள் மத்தியில் தினந்தோறும் மகிழ்ச்சிக்கான தருணங்களை இன்னும் சிறப்பாக்குவதில் இவ்வர்த்தகநாமம் தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளது.

