Nov 27, 2025 - 01:51 PM -
0
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட First Capital Startup Nation னின் Hatch Demo Day நிகழ்வு ஒக்டோபர் 1, 2025 அன்று கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புதுமை, இலக்கு மற்றும் சந்தர்ப்பங்களை கண்டறிவதற்கான ஓர் சக்தி வாய்ந்த மாலைப்பொழுதில் இலங்கையின் முன்னணி ஸ்தாபகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சூழலியல் பங்காளர்கள் அனைவரும் ஒன்று கூடினர்.
இந்நிகழ்வானது Hatch ன் பிரதான இடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது நாட்டின் தொழில் முயற்சி சார் பயணத்தின் ஒரு தீர்க்கமான மைல்கல்லைக் குறிப்பதுடன் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் திறமைகள் மற்றும் இலங்கையின் புத்தாக்க சமுதாயத்தின் ஒன்றிணைந்த சக்தியினையும் வெளிக் காட்டுகின்றது. இம்மாலைப்பொழுதானது Hatch ன், First Capital Startup Nation ன் வெளியீட்டுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து First Capital Holdings PLC தலைவர் திரு. ராஜேந்திர தியாகராஜா மற்றும் Hatch ன் இணை ஸ்தாபகர் ஜீவன் ஞானம் ஆகியோரின் ஆரம்ப உரை , அன்றைய நிகழ்வுக்கான நோக்கம் முன்னேற்றம் இரண்டையும் கொண்டாடும் ஓர் இரவுக்கு வழிவகுத்தது.
மூன்று ஆரம்ப நிலை வியாபாரங்கள் முன்னிலை வகிக்கின்றன
ஏழு விதிவிலக்கான இறுதிப் போட்டியாளர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் குழு முன் தங்கள் யோசனைகளை முன்வைத்தனர், மூன்று தொடக்க நிறுவனங்கள் முன்னிலை பெற்று , அவை இணைந்த 160,000 அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு தகுதியானவை:
* TorchLabs - தேவின் டி சில்வா
* Seashore Gardens - ஷோன் செனரத் மற்றும் ஷவேந்திர ராஜபக்ச
* Docupath AI - ஷெரான் கொரேரா
ஒவ்வொரு ஸ்தாபகரும் புத்தாக்கம் மற்றும் மீள்தன்மை எவ்வாறு இலங்கையின் புதிய தொழில்முனைவோரை தொடர்ந்து வரையறுக்கிறது ஒவ்வொரு ஸ்தாபகரும் புத்தாக்கம் மற்றும் மீள்தன்மை எவ்வாறு இலங்கையின் புதிய தொழில்முனைவோரை தொடர்ந்து வரையறுக்கிறது என்பதைக் காட்டினர். முதலீட்டாளர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு ஒத்துழைப்பு மற்றும் விரிவாக்கத்திற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தினர்.
தனது அனுபவத்தைப் பற்றி TorchLabs இன் தேவின் டி சில்வா கூறியபோது:
Hatch மூலம் First Capital Startup Nation பங்கேற்றது மிகவும் நன்றாக இருந்தது. நான் நிறைய ஸ்தாபகர்களைச் சந்தித்து, முதலீட்டாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினேன், இது ஒரு மதிப்புமிக்க அனுபவமாகும்.
எதிர்காலத்தில் அனைவரும் இத் திட்டத்தில் இணைய வேண்டும்; இது ஒரு சிறந்த கற்றலுக்கான வாய்ப்பாகும் . அடுத்த கட்டத்தில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு ஒருபோதும் தெரியாது எனவே எந்தவொரு இளம் ஸ்தாபகரும் இப்போதே ஆரம்பியுங்கள் .
Startup Nation னின் தூரநோக்கு
Hatch ன் பயணம் பற்றி, Hatch இணை நிறுவுநர் ஜீவன் ஞானம் கூறுகையில், சிறந்த யோசனைகள் ஒரு கணத்தில் நடப்பதில்லை, அவை இடைவிடாத கேள்வி மற்றும் வடிகட்டலின் மூலமே பரிணமிக்கின்றன. 2018 இல் ஓர் இணை வேலைத்தளமாக ஆரம்பித்து , இலங்கையின் தொழில் முனைவோர் சூழலின் ஒரு முக்கிய மையப்பகுதியாக மாறியுள்ளது.
Draper, ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் Grow Valley ஆகியோரிடமிருந்து ஏற்கனவே $2 மில்லியன் பெறப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் இடங்களை உருவாக்குவது மட்டுமல்ல Mesh, HLab மற்றும் Hatch Funds போன்ற புதிய முயற்சிகளுடன் Startup Nation ற்கு சக்தியளிக்கும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகின்றோம். அவர் மேலும் கூறுகையில்:
இலங்கை கிழக்கு மற்றும் மேற்கு இடையே ஒரு நடுநிலை பாலமாக நிற்கிறது.தொழிற்படுவதுடன் , தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான ஒரு சுறுசுறுப்பான சோதனை தளமாக தொழிற்படுகின்றது. இன்று இங்கு ஒன்பது நாடுகளின் கூட்டாளர்களுடன், நோக்கமும் லாபமும் ஒன்றாக வளர முடியும் என்பதை நாங்கள் நிரூபித்து வருகின்றோம்.
First Capital Holdings PLCயின் நிர்வாக இயக்குனர்/தலைமை நிர்வாக அதிகாரி டில்ஷான் வீ ரசேகரவின் கருத்து என்னவெனில் : இம் முயற்சியானது இலங்கையின் தொழில் முயற்சி சுற்றுச்சூழலை ஓர் முக்கியமான வலுப்படுத்துவதில் ஓர் முக்கியமான மைல்கல்லை பிரதிபலிக்கிறது. 100 இற்கும் மேற்பட்ட நிறுவனர்கள் மற்றும் 50 உலகளாவிய முதலீட்டாளர்களின் வலுவான பங்கேற்பு, நாட்டின் புத்தாக்க திறனில் வளர்ந்து வரும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.கொள்கை, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு கட்டமைப்புகள் பற்றிய கலந்துரையாடல்கள் தொழில்முனைவோரின் அடுத்த கட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும். First Capital Holding PLC லில் , எங்களுடைய நோக்கமானது புதுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம் முன்னேற்றத்தைஏற்படுத்துவதாகும். Startup Nation நிகழ்ச்சித் திட்டத்தில் Hatch உடன் இணைவதன் மூலம் அளவிடக்கூடிய வணிகங்களை ஆதரிப்பது மற்றும் அனைத்து இலங்கையர்களையும் மிகவும் ஆற்றல்மிக்க, எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக மாற்றும் வாய்ப்புகளை உருவாக்குவது என்ற எங்கள் தூரநோக்கு பார்வையுடன் ஒத்துப்போகிறது.
பங்குடைமையின் சக்தி
நிகழ்வின் வெள்ளி அனுசரணையாளர் , Orion City யின் சந்தைப்படுத்தல் தலைவர், சுதீர பண்டார பகிர்ந்து கொண்டது யாதெனில் : புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கான மையமாக, Orion City , Hatch ன் First Capital Startup Nation வெள்ளி அனுசரணையை வழங்குவதில் பெருமையடைகின்றோம் . இந்நிகழ்வு இலங்கையின் ஆரம்ப நிலை வியாபார சமூகத்திற்குள் உள்ள நம்பமுடியாத திறமைகளை வெளிப்படுத்தியதுடன், புரட்சிகரமான யோசனைகள் செழிக்கக்கூடிய ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதில் எங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது.
தந்திரோபாய பங்காளியான , Port City கொழும்பு உள்ளூர் மற்றும் சர்வதேச வியாபார சூழலிற்கு ஏற்றவகையில், முதலீட்டாளர்களுக்கு இலகுவான வகையில் ஓர் சர்வதேச சந்தைக்கு ஓர் பாலமாக தொழில் படுகின்றது. இந்த சிறப்பு பொருளாதார வலயம் (SEZ), வெளிநாட்டு நிதியுதவிக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் மூலதன வெளியேற்ற சவால்களை நிவர்த்தி செய்கிறது, அதே நேரத்தில் முதலீடு மற்றும் சிறந்த திறமையாளர்களை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாக மாறும் இலங்கையின் தொலைநோக்கு பார்வையை ஆதரிக்கிறது.
இணைப்புகளை வலுப்படுத்தல்
Hatchன் First Capital Startup Nation ஆனது பங்குதாரர்கள் மற்றும் அனுசரணையாளர்களின் வலையமைப்பு, உட்பட தலைப்பிக்கான அனுசரணையாளரான First Capital Holdings PLC , வெள்ளி அனுசரணையாளரான Orion City மற்றும் தந்திரோபாய அனுசரணையாளரான Port City கொழும்பு உட்பட பலதரப்பட்ட ஆதரவுகளுடன் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
மேலதிக பங்காளர்களான ICTA(தேசிய பங்குதாரர்) தேசிய புத்தாக்க முகவர் (தேசிய புத்தாக்க பங்காளர் ) , நிறுவுனர் நிறுவனம் மற்றும் தாக்கம் (அறிவு சார் பங்காளர்) , Lankan Angel Network (முதலீட்டாளர் பங்காளர் ) , TiE Colombo (Impact Partner) மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பங்காளர் பல்கலைக்கழகம் (கல்வி பங்காளர் ) நிகழ்வில் பெறப்பட்ட ஏனைய ஆதரவுகளாவன இலங்கை விமான சேவை (உத்தியோகபூர்வ வான்வழி பங்குதாரர் ), சிங்கப்பூர் இலங்கை வணிக கழகம் ( (Outreach Partner), SLASSCOM (கைத்தொழில் பங்குதாரர் ) LMD (அச்சுப்பதிப்பு பங்குதாரர்) Ada Derana 24, TV Derana, Echelon, Economy Next மற்றும் Pulse (ஊடகப் பங்குதாரர்கள் ) மற்றும் FOX FM (வானொலி பங்குதாரர்) மற்றும் ART TV (தொலைக்காட்சி பங்குதாரர் ). விருந்தோம்பல் ஆதரவை சோபியா கொழும்பு , Radisson Collection Resort Galle மற்றும் Orion City Hotel போன்றன வழங்கின.
Hatch Demo Day-யின் The First Capital Startup Nation, ஆனது இலங்கையின் ஆரம்ப நிலை வியாபாரங்களுக்கான சூழலின் துடிப்பு மற்றும் ஆற்றலை அடிக்கோட்டிட்டுக் காட்டியதுடன் - ஒத்துழைப்பை வளர்ப்பது, நிதியுதவியை பெறுவது மற்றும் நிறுவுனர்களை பிராந்திய மற்றும் உலகளாவிய வெற்றியை நோக்கிய உந்துதலை ஏற்படுத்தியது.

