Nov 27, 2025 - 02:16 PM -
0
தெதுரு ஓயா படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாகவும், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஊடாக ஏற்கனவே வினாடிக்கு 77,400 கன அடி வீதத்தில் நீர் தெதுரு ஓயாவிற்கு விடுவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களம், அடுத்த சில மணித்தியாலங்களில் அப்பகுதியில் நிலவும் வெள்ள நிலைமையானது பாரிய வெள்ள நிலையாக மாறக்கூடும் என தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்மானிகளின் அளவீடுகளின்படி, தெதுரு ஓயா படுகையில் அமைந்துள்ள வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தெதுரு ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு இந்த பாரிய வெள்ள நிலைமையால் தாக்கம் ஏற்படும்.
குறிப்பாக தெதுரு ஓயா படுகையின் குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தெதுரு ஓயா தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.
இந்நிலைமை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளிடம் நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

