Nov 27, 2025 - 05:40 PM -
0
தெதுறு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஹவ எல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் சிக்கியிருந்த மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Bell-212 ரக ஹெலிகொப்டர் மூலம் இந்த மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப் படையின் இரத்மலானை முகாமில் இணைக்கப்பட்டிருந்த மீட்புக் குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

