Nov 27, 2025 - 07:56 PM -
0
மகாவலி கங்கை ஆற்றுப்படுகையில், யட்டிநுவர மற்றும் கங்கவட்டக் கோறளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் கடும் வெள்ள நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மகாவலி கங்கைக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், ருவான்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவில் களனி கங்கை ஆற்றுப்படுகையில் உள்ள தாழ்நிலப் பகுதிகளிலும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறு வெள்ள நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

