Nov 27, 2025 - 09:57 PM -
0
மகாவலி கங்கையின் ஆற்றப்படுகையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் பெரும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நீர்மட்டம் உயரும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய பெரும் வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறுவது சிறந்தது என்றும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

