Nov 28, 2025 - 06:54 PM -
0
தற்போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 69 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக 34 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும், 61,175 குடும்பங்களைச் சேர்ந்த 219,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 5,890 குடும்பங்களைச் சேர்ந்த 18,443 பேர் 266 தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் முப்படைகளும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

