Nov 28, 2025 - 07:22 PM -
0
ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்களின் அணைகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது சமூக ஊடகங்களில் இது தொடர்பான செய்தி ஒன்று பரவி வருவதாகவும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அந்த நீர்த்தேக்க அணைகளில் அத்தகைய அபாயகரமான நிலைமை எதுவும் இல்லை என்பதை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

