செய்திகள்
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

Nov 29, 2025 - 10:51 AM -

0

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

குடிவரவு குடியகல்வு திணைக்களம் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இதோ,

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையால் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்குவது குறித்துக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, விசா வசதிகளை வழங்குவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்வருமாறு: 

விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டமை மற்றும் போக்குவரத்துச் சிரமங்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேற முடியாமல் விசா காலாவதியான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு, 2025.11.28ஆம் திகதியிலிருந்து அடுத்த 7 நாட்களுக்கு அபராதம் அல்லது விசா கட்டணங்கள் இன்றி விமான நிலையங்கள் ஊடாக வெளியேற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது இலங்கையில் தங்கியிருக்கும், குறுகிய கால அல்லது நீண்ட கால விசா காலாவதியான நிலையில், மேலும் விசா காலத்தை நீடித்துக்கொள்ள விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு, 2025.11.28ஆம் திகதியிலிருந்து அடுத்த 7 நாட்களுக்கு அபராதம் அறவிடாமல் வீசாவை நீடித்துக்கொள்ளச் சலுகைக்காலமும் வழங்கப்பட்டுள்ளது. 

குறுகிய காலச் சுற்றுலா வீசா அனுமதியை நீடிப்பதற்கு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு பிரவேசித்து செயற்படுத்த முடியும்: https://eservices.immigration.gov.lk/vs/login.php

Comments
0

MOST READ
01
02
03
04
05