Nov 30, 2025 - 08:01 PM -
0
தித்வா புயல் காங்கேசன்துறையிலிருந்து வடக்கிழக்காக சுமார் 220 கி.மீ தொலைவில் வடக்கு அகலாங்கு 11.5இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80.6E இற்கு அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அமைப்பு நாட்டை விட்டு விலகி வடக்கு திசையை நோக்கி நகரும் சாத்தியம் அதிகமாக உள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
புயலின் நகர்வுப் பாதை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தாக்கத்தினால், திருகோணமலை முதல் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ வரையும், இடைக்கிடையே மணிக்கு 70 கி.மீ வரையான பலத்த காற்றும் வீசக்கூடும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ ஆக இருக்கும்.
சிலாபம் முதல் புத்தளம் ஊடாக மன்னார் வரையான மற்றும் திருகோணமலை முதல் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
இந்த கடற்பரப்புகள் இடைக்கிடையே ஓரளவுக்கு கொந்தளிப்பாக காணப்படும்.
நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகள் சிறிதளவு கொந்தளிப்பாக காணப்படலாம்.
திருகோணமலை முதல் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில் தொடர்ந்தும் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்தி வெளியிடப்பட்டிருந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

