செய்திகள்
மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு

Dec 1, 2025 - 10:12 AM -

0

 மரக்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்வு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. 

இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், போஞ்சு, லீக்ஸ் போன்ற மரக்கறிகளும் 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளன. 

கடந்த வாரங்களில் 30 ரூபாவிற்கு விற்பனையான ஒரு கிலோ கிராம் வட்டகாயின் விலையும் 100 முதல் 130 வரை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. 

மழை மற்றும் மண்சரிவு காரணமாக பெரும்பாலான மரக்கறித் தோட்டப் பயிர்கள் அழிவடைந்தமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05