Dec 1, 2025 - 03:06 PM -
0
பிரிட்டனில் தோற்றம் பெற்று உலகம் முழுவதும் அழகுக்கான நெறிமுறைகளைப் பேணி மக்கள் மனதில் இடம் பிடித்த அழகுக்கான வர்த்தக நாமமான The Body Shop, கொழும்பில் உள்ள புகழ் பெற்ற 'One Galle Face Mall' இல் தனது புதிய விற்பனை நிலையத்தைத் திறந்து, இலங்கையில் வெற்றிகரமான 10 ஆண்டுகளை சிறப்பாகக் கொண்டாடுகிறது.
நாட்டில் The Body Shop தனது இருப்பை விரிவுப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையின் முன்னணி ஷொப்பிங் தளமொன்றில் அமைந்துள்ள இந்த புதிய விற்பனை நிலையம், நாட்டில் அதன் பயணத்தில் முக்கியமான ஒருதடத்தைக் குறிக்கிறது. புதிய பிரதான விற்பனை நிலையமானது’ வடிவமைப்பு, நிலைத்தன்மை, செயற்பாடு மற்றும் நாட்டில் நிலைத்த அழகை ஊக்குவிக்கும் வர்த்தக நாமத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இலங்கை வாடிக்கையாளர்கள் தற்போது The Body Shop நிறுவனத்தில் சரும பராமரிப்பு, உடல் பராமரிப்பு, தலை முடி பராமரிப்பு மற்றும் நறுமணப் பொருட்களின் பூரண வரிசையையும் எளிதாகப் பெற முடியும். மேலும் ‘மீள்சுழற்சியை மீளப்பெறும்’ Return Repeat Recycle program மற்றும் சமூக நியாயமான வர்த்தக உற்பத்திகளான Community Fair Trade products போன்ற The Body Shop இன் முன்னோடி முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது.
இதன் ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராகிய அண்டு்ரூ பேட்ரிக் அவர்கள் (H.E. Andrew Patrick) கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் Body Shop இலங்கையின் பணிப்பாளர் கோசல ரோஹண விக்கிரமநாயக்க, Quest Retail, மற்றும் The Body Shop தெற்காசியாவின் நிறைவேற்றுத் தலைவி ஷ்ரிதி மல்வோத்திரா, The Body Shop தெற்காசியாவின் பிரதம வருமான அதிகாரியான விஷால் சதுர்வேதி ஆகியோரும் பங்கேற்றனர்.
“இந்தப் புதிய விற்பனை நிலையமானது, The Body Shop நிறுவனத்தின் இலங்கைக்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, இலங்கை வாடிக்கையாளர்களின் புத்துணர்ச்சி மற்றும் தடைகளை மீறும் திறனை கொண்டாடுகிறது. உயர்தர செயல்திறன் கொண்ட தயாரிப்புகளையும், பெறுமதியான செயல்பாட்டு மனப்பாங்கையும் வழிகாட்டியாகக் கொண்டு முன்னோடி வர்த்தகநாமமாகத் திகழும் The Body Shop மரபை அணைத்துக்கொண்டவர்கள் இவர்களே,” என Quest Retail, மற்றும் The Body Shop தெற்காசியாவின் நிறைவேற்றுத் தலைவி ஷ்ரிதி மல்வோத்திரா கருத்து தெரிவித்தார்.“எமது புதிய மற்றும் நீண்டநாள் வாடிக்கையாளர்கள், தற்போது பண்டிகைக்கால புதிய தொகுப்புகளை முன்னோட்டமாகக் காண முடிவதோடு, வர்த்தகநாமத்தின் புகழ்பெற்ற பாரம்பரிய தயாரிப்புகளையும் தொடர்ந்து அனுபவிக்க முடியும்.”
“இந்த முழுமையான புதிய ஷொப்பிங் அனுபவத்தின் ஆரம்பத்துடன், இங்கு நாம் ஒரு தசாப்தமாக தொடர்ந்துள்ள எமது பயணத்தை கொண்டாடுவதானது, இலங்கை நுகர்வோருக்கான உண்மையான, நோக்கமிக்க அழகின் புதிய அத்தியாயத்தைஆரம்பிக்கிறது,” என்று The Body Shop இலங்கையின் பணிப்பாளரான கோசல ரோஹண விக்கிரமநாயக்க அவர்கள் கூறினார்.
இந்த ஆண்டு, விடுமுறை காலத்திற்கான சிறந்த பரிசளிப்பு தலமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் The Body Shop, 2025 பண்டிகைக்காலத்தில் மூன்று தனித்துவமான நறுமணங்களின் சிறப்பு முன்னோட்டத்தை வழங்குகிறது: அவை கரமேல் குடில் (Caramel Cuddle), கிரான்பெர்ரி கிரஷ் (Cranberry Crush) மற்றும் ஷுகர்ப்ளம் பஷன் (Sugarplum Passion). ஒவ்வொரு நறுமணத்திற்கும் Bath & Shower Gel, Body Butter, Body Yoghurt, Hand Balm, மற்றும் Body Mist. ஆகியவை தனிப்பட்ட வடிவத்தில் கிடைக்கின்றன. மேலும், பரிசளிப்பதை விரும்பும் மற்றும் தனிப்பட்ட அக்கறை உணர்வை மதிக்கும் நபர்களுக்காக, The Body Shop அழகாக வடிவமைக்கப்பட்ட ‘நீங்களே தெரிவு செய்யும் அன்பளிப்பு’ பெட்டிகளின் தெரிவை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தாமே சிந்தித்து தயாரிக்கும் பரிசுத் தொகுதிகளை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
எப்போதும் போல, The Body Shop தயாரிப்புகள், கொடூரமற்ற (cruelty-free), இயற்கை மூலப்பொருட்கள் மற்றும் சமூக நியாயமான வர்த்தகம் ஆகியவற்றில் வர்த்தகநாமத்தின் அசைக்க முடியாத இணக்கப்பாட்டுடன் உருவாக்கப்பட்டவை ஆகும்.
One Galle Face Mall விற்பனை நிலையத்திற்கு வருபவர்கள், The Body Shop நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் குளியல் மற்றும் உடல் பராமரிப்பு, சரும பராமரிப்பு, தலைமுடி பராமரிப்பு மற்றும் நறுமணப் பொருட்களுக்கு சிறப்பு உறுப்பினர் சலுகைகளைப் பெறமுடியும்.
The Body Shopஇன் புதிய பண்டிகை தயாரிப்புகளும், வர்த்தகநாமத்தின் அடையாளமாக விளங்கும் முக்கிய தயாரிப்புகளும், பகத்தல வீதி, அலெக்ஸான்ட்ரா பிளேஸில் அமைத்துள்ள ஓடெல், கண்டி சிட்டி சென்டர், கொழும்பு சிட்டி சென்டர் மற்றும் ஹவ்லொக் சிட்டி ஆகிய இடங்களில் உள்ள வர்த்தக நாமத்தின் முக்கிய விற்பனை நிலையங்களிலும் கிடைக்கின்றன.

