வணிகம்
BYD மற்றும் JKCG Auto-வினால் புதிய BYD ATTO 1 மற்றும் BYD ATTO 2 வாகனங்கள் இலங்கையில் அறிமுகம்

Dec 1, 2025 - 03:12 PM -

0

BYD மற்றும் JKCG Auto-வினால் புதிய BYD ATTO 1 மற்றும் BYD ATTO 2 வாகனங்கள் இலங்கையில் அறிமுகம்

BYD நிறுவனமும் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனமும் இணைந்து புதிய BYD ATTO 1 மற்றும் BYD ATTO 2 வாகன மாதிரிகளை அதிகாரபூர்வமாக இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

நவம்பர் 21 முதல் 23 வரை BMICH இல் நடைபெற்ற கொழும்பு மோட்டார் கண்காட்சியில் பொதுமக்களுக்கு முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த 2 மாதிரிகளும் தற்போது BYD இன் விரிவடைந்து வரும் மாற்று புதிய சக்தி வாகன (New Energy Vehicle -NEV) வரிசையில் புதிதாக இணைந்துள்ளன. 

மேலும், இந்த மோட்டார் கண்காட்சியில் SEALION 5, SEALION 6, SHARK 06, ATTO 3, DOLPHIN, SEAL மற்றும் M6 உள்ளிட்ட BYD இன் பல்வேறு மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டன. 

முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் hatchback வகை BYD ATTO 1, நிறுவனத்தின் புகழ்பெற்ற Blade Battery தொழில்நுட்பத்தையும் 8-in-1 மின்சார இயக்க அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதிக செயல்திறன், மென்மையான துவக்க வேகம் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மையை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட இம்மாதிரி, சிறிய அளவு மற்றும் குறைந்த எடை கொண்ட வடிவமைப்பால் நகரப் பயணங்களுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. அத்துடன், ஒரே முறை சார்ஜ் செய்தால் சுமார் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். 10.1 அங்குல தொடுதிரை (touchscreen), Apple CarPlay மற்றும் Android Auto இணைப்பு வசதி, வயர்லெஸ் சார்ஜிங், ஆறு airbag பாதுகாப்பு அமைப்பு போன்ற அம்சங்கள் மூலம், நவீன தொழில்நுட்பத்தை அன்றாட பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் BYD நிறுவனம் கொண்டுள்ள கவனத்தை பிரதிபலிக்கின்றன. 

அதேபோல், compact SUV வகையைச் சேர்ந்த BYD ATTO 2, இந்த தொழில்நுட்ப அடித்தளங்களை மேலும் மேம்படுத்தி, BYD இன் CTB (Cell-to-Body) தளத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பேட்டரி நேரடியாக வாகனத்தின் கட்டமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு, மேம்பட்ட உறுதித்தன்மை, பாதுகாப்பு மற்றும் சிறந்த ஓட்டுநர் கட்டுப்பாட்டை வழங்குகிறது. 

இந்த தளத்தொழில்நுட்பம் மேம்பட்ட உட்புற அனுபவத்தை வழங்குகிறது. 12.8 அங்குல தொடுதிரை, குரல் உதவியாளர் (voice assistant), காற்றோட்டமுள்ள முன் ஆசனங்கள் மற்றும் விரிவான ஓட்டுநர் உதவி அம்சங்கள் இதில் அடங்கும். 360-டிகிரி கண்காணிப்பு அமைப்பு (monitor), தகவமைவு வேக கட்டுப்பாடு (adaptive cruise control) மற்றும் பாதை பராமரிப்பு ஆதரவு ((lane-keeping support) போன்ற அமைப்புகள் நீண்ட பயணங்களில் அதிக நம்பிக்கையையும் பாதுகாப்பையும் வழங்குகின்றன. மேலும், தனது அனைத்து வாகனங்களிலும் அறிவார்ந்த மற்றும் பயனர் மையமான தொழில்நுட்பத்தை வழங்குவதில் BYD கொண்டுள்ள முக்கியத்துவத்தை இவை வெளிப்படுத்துகின்றன. 

இப்புதிய அறிமுகம் தொடர்பில் John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்து தெரிவிக்கையில், “வெவ்வேறு விலை வரம்புகள், ஓட்டுநர் பழக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, இலங்கை நுகர்வோருக்கு உயர்தர மாற்று புதிய சக்தி வாகனங்களின் பரந்த தேர்வை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பேட்டரி தொழில்நுட்பம் முதல் வாகன வடிவமைப்பு ஒருங்கிணைப்பு மற்றும் அறிவார்ந்த கட்டுப்பாட்டு அமைப்புகள் வரை BYD இன் ஆழமான தொழில்நுட்ப வலிமையின் ஆதரவுடன், ஒவ்வொரு மாதிரியும் நடைமுறை சூழ்நிலைகளில் நம்பகமாக செயல்படுகிறது. எனவே இந்த வாகனங்கள் சிறந்த மின்சார பயண அனுபவத்தை வழங்கக்கூடிய வாகனங்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.” என தெரிவித்தார். 

BYD ATTO 1மற்றும் BYD ATTO 2 வாகனங்களின் வருகையுடன், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரு மாதிரிகளும் தற்போது இலங்கை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. BYD ATTO 1 ஐந்து நட்சத்திர ANCAP பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது மாற்று புதிய சக்தி வாகனங்களை எளிதாக பெறுவதற்கான சிறந்த தேர்வாக இதை வலுப்படுத்துகிறது. இந்த வாகனங்களின் அறிமுகம், நம்பகமான அடுத்த தலைமுறை வாகனங்களுடன் இலங்கையின் மாற்று புதிய சக்தி வாகன சந்தையை விரிவாக்குவதில் BYD மற்றும் John Keells CG Auto (JKCG Auto) நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இதனிடையே, இந்த இரண்டு மாதிரிகளுக்கும் தற்போது முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05