Dec 1, 2025 - 03:24 PM -
0
மேர்கன்டைல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி (MI ஃபினான்ஸ்), மொத்த சொத்துக்களாக ரூ. 100 பில்லியனை கடந்து, உறுதியான இரண்டாம் நிதிக்காலாண்டு வளர்ச்சியுடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மை மைல்கல்லை பதிவு செய்துள்ளது. அதனூடாக, இலங்கையின் முன்னணி வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. நடுத்தரளவு செயற்பாட்டாளர் என்பதிலிருந்து பாரிய சந்தை செயற்பாட்டாளராக 60 வருட கால நிறுவனம் எனும் நிலையை இந்த சாதனை உறுதி செய்துள்ளது.
குறிப்பிடத்தக்க சிறந்த அரையாண்டு நிதிசார் பெறுபேறுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், வரிக்கு பிந்திய தேறிய இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35% உயர்ந்து, ரூ. 504 மில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்கு முந்திய இலாபம் 34% இனால் உயர்ந்து ரூ. 837 மில்லியனாக பதிவாகியிருந்தது. இந்த உறுதியான வினைத்திறனில், மேர்கன்டைல் கடன் புத்தகத்தின் 86% அபார வளர்ச்சியும் பங்களிப்புச் செலுத்தியிருந்ததுடன், ஆண்டின் மையப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 75 பில்லியனைக் கடந்திருந்தது.
தேறிய வட்டி வருமானம் 24% இனால் உயர்ந்து ரூ. 3.4 பில்லியனாக பதிவாகியிருந்தது. இதில், வருமானத்தின் 27% அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், மூலோபாய மீளவிலையிடல்களினூடாக, நிதிவசதியளிப்பு செலவுகளை குறைவடையச் செய்திருந்தது. இலாபகரத்தன்மை உயர்வில் வைப்புகளில் துரித 40% உயர்வை பதிவு செய்திருந்ததுடன், நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் நிறுவனத்தின் பரந்த 85 கிளைகள் வலையமைப்பினூடாக இந்த உயர்வை எய்த முடிந்திருந்தது.
நிறுவனத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் மாற்றியமைப்பு பயணத்தினால் இந்த உறுதியான முன்னேற்றம் பிரதிபலிக்கப்பட்டிருந்தது. 18 மாத காலப்பகுதியில், மேர்கன்டைல் கிளை வலையமைப்பு 40 என்பதிலிருந்து 85 ஆக உயர்வடைந்திருந்தது. நெருக்கடியான சூழலிலிருந்து துறை மீட்சியை சந்திக்கும் நிலையில், நிறுவனம் கடுமையான ஒழுக்கத்தை பேணியிருந்தது. விரிவாக்க புள்ளி விபரங்களினூடாக கணிப்பீடுகளின் தொலைநோக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. கடன் வழங்கல் பிரிவு ரூ. 37 பில்லியன் என்பதிலிருந்து ரூ. 75 பில்லியனாக உயர்ந்திருந்தது. இலங்கையின் நுகர்வோருக்கு சேவைகளை வழங்கும் முக்கிய பிரிவான தங்கக் கடன்கள் ரூ. 2 பில்லி்யன் என்பதிலிருந்து ரூ. 12 பில்லியனாக உயர்ந்திருந்தது. வைப்புகள் ரூ. 36 பில்லியன் என்பதிலிருந்து ரூ. 51 பில்லியனாக உயர்ந்து, உறுதியான வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் நிலைபேறான திரள்வு பாய்ச்சல்கள் ஆகியவற்றை பிரதிபலித்திருந்தன.
இந்த வளர்ச்சியானது, அளவுத் திரட்டல் என்பதிலிருந்து பிரிவின் தரத்தை வேறுபடுத்திக் காண்பித்துள்ளது. பாராட்டத்தக்க விதத்தில் குறைந்த 4.65% விகிதத்திலான தொழிற்படாக் கடன் விகிதம் (NPL ratio) ஆனது, நிறுவனத்தின் தொடர்ச்சியான வர்த்தக வளர்ச்சிப் பாதைக்கு இணையாக பேணப்பட்ட அதன் குறைபாடற்ற சொத்து தர நிர்ணயங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்த செயல்பாடு ஒரு உறுதியான ரூ.15 பில்லியன் மூலதன அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது. நிறுவனத்தின் BBB-(Ika) தேசிய நீண்ட கால தரப்படுத்தலை ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்கா நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதனுடன் மேம்படுத்தப்பட்ட நிலையான கண்ணோட்டம் வழங்கப்பட்டுள்ளதும் இந்தச் செயற்பாட்டிற்கான சமீபத்திய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
முகாமைத்துவ பணிப்பாளர் ஜெராட் ஒண்டாட்ஜி கருத்துத் தெரிவிக்கையில், “மொத்த சொத்துகள் பிரிவில் ரூ. 100 பில்லியன் எனும் இலக்கை கடந்துள்ளமையானது, ஆறு தசாப்த காலமாக வைப்பாளர்களின் ஈடுபாடுகளை பேணி, அர்த்தமுள்ள பெறுமதியை ஏற்படுத்தும் நோக்கை நிறைவேற்றுவதாக அமைந்துள்ளது. இந்த மைல்கல்லினூடாக, எமது கட்டமைக்கப்பட்ட வளர்ச்சி மூலோபாயங்கள் மற்றும் ஒழுக்கமான நிறைவேற்றங்கள் போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளமை மட்டுமன்றி, எம்மை தமது நிதிசார் பங்காளராக தெரிவு செய்துள்ள 250,000க்கும் அதிகமான இலங்கையர்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது.” என்றார்.
மேர்கன்டைல் இன்வெஸ்ட்மன்ட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் சூழலைப் பொறுத்து மேம்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. 1964 இல் வாகன நிதி வசதிகளை வழங்குவதை தனது பிரதான நோக்காகக் கொண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம், 2011 ஆம் ஆண்டு முதல் ஒன்டாட்ஜியின் தலைமைத்துவதினூடாக மாற்றத்தை துரிதப்படுத்துவதற்கு முன்பு படிப்படியாக நற்பெயரைக் கட்டியெழுப்பியது. வெளிப்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க வலையமைப்பு வளர்ச்சியானது, மேர்கன்டைல் இன்வெஸ்ட்மன்ட்ஸை நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நிதி மையங்களில் ஒன்றாக வெளிப்படையாக நிலைநிறுத்தியுள்ளது.
விஸ்தரிப்பு உத்தியானது வேண்டுமென்றே போதியளவு சேவை வழங்கப்படாத மாவட்டங்களை இலக்கு வைத்து, சொத்து வளர்ச்சியைத் தூண்டுவதற்காக குறைந்த செலவிலான வைப்புத் தளத்தை உருவாக்கும் அதே வேளையில், முன்பு அணுகப்படாத சமூகங்களுக்கு முறையான நிதிச் சேவைகளை நீட்டித்தது. நிதி உள்ளடக்கத்திற்கும் வணிக ரீதியான சாத்தியக்கூறுகளுக்கும் இடையிலான இந்த இரட்டை முக்கியத்துவம் ஒரு தனித்துவமான கவனம் செலுத்தும் மாதிரியை பிரதிபலிக்கிறது. இது வாகன குத்தகை, நுண்-வாகனக் கடன் வழங்கல், மற்றும் பிணையான தங்கக் கடன்கள் ஆகியவற்றில் நகர்ப்புற மற்றும் பகுதியளவு-நகர்ப்புறத் தேவையை நிறுவனத்தைப் பிடிக்க உதவுகிறது.
2027 ஆம் ஆண்டு வரையில் விரிவாக்கத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், e-wallet, இணைய வங்கிச் சேவை மற்றும் கார்ட் சேவைத் தெரிவுகள் போன்ற டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளில் மூலோபாய முதலீடுகளுடன், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மன்ட்ஸ், புதிதாக எய்தியுள்ள இந்த வளர்ச்சியின் நிலைபேறான போட்டிகரமான அனுகூலத்தை சாதகமாக்கிக் கொள்ளும் நிலையிலுள்ளது. நிறுவனத்தின் போக்கினை கண்காணிக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு, இந்த ரூ. 100 பில்லியன் மைல்கல் என்பது ஒரு சாதனை மட்டுமன்றி, வளர்ச்சிக்கான அடுத்தகட்டமாகவும் அமைந்துள்ளது. நிறுவனத்தின் தலைமைத்துவத்தினால், பங்காளர்களுக்கான அதன் அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது. “நிறுவனத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன, மேலும் ஸ்திரத்தன்மை, நம்பிக்கை, மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சியை தொடர நிறுவனம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.”

