வணிகம்
கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள InsureMe, இலங்கையின் டிஜிட்டல் காப்புறுதிப் புரட்சியில் மைல்கல்லை நிலைநாட்டியுள்ளது

Dec 1, 2025 - 03:38 PM -

0

கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள InsureMe, இலங்கையின் டிஜிட்டல் காப்புறுதிப் புரட்சியில் மைல்கல்லை நிலைநாட்டியுள்ளது

இலங்கையின் முன்னோடி டிஜிட்டல் காப்புறுதித் தொகுப்பாளரும், நாட்டின் உச்ச காப்புறுதி இடைத்தரகு சேவை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவதுமான InsureMe, கொழும்பு பங்குச் சந்தையில் இன்று நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், பொது நிறுவனமாக மாறுகின்ற நாட்டின் முதலாவது காப்புறுதி இடைத்தரகு சேவை நிறுவனம் என்ற சாதனையை நிலைநாட்டி, தனது வளர்ச்சிப் பயணத்தில் புதிய சகாப்தத்தில் காலடியெடுத்து வைத்துள்ளது. 

2016 ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடமிருந்து உரிமம் பெற்றுள்ள InsureMe, வெளிப்படைத்தன்மை கொண்ட தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படுகின்ற டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தி, தனிநபர்களும், நிறுவனங்களும் காப்புறுதியை கொள்வனவு செய்கின்ற மற்றும் இழப்பீட்டுக் கோரல்களை மேற்கொள்கின்ற வழிமுறையை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. சந்தையில் நிறுவனத்தின் வலுவான ஸ்தானம், புத்தாக்கம் குறித்த சிறப்பான கடந்த கால சாதனைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் சிறப்பான ஆட்சி நிர்வாகம் மீதான ஓயாத அர்ப்பணிப்பு, மற்றும் இலங்கை எங்கிலும், அதற்கு அப்பாலும் காப்புறுதியை அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் விரிவுபடுத்துவது குறித்த அதன் பணிநோக்கு ஆகியவற்றை இந்த நிரற்படுத்தல் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. 

காப்புறுதி குறித்த தேடல், ஒப்பீடு, கொள்வனவு, மற்றும் நிர்வகிப்பு ஆகியவற்றை இலகுபடுத்தி, வாடிக்கையாளர்களையும், முன்னணி காப்புறுதி நிறுவனங்களையும் இணைக்கின்ற கட்டமைப்பொன்றை InsureMe காலப்போக்கில் கட்டியெழுப்பியுள்ளது. தனது தொழில்நுட்ப அங்கமான DIGIS மூலமாக, காப்புறுதியாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் நவீன காப்புறுதித் தொழில்நுட்பத் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்கி வருகின்றது. சிங்கப்பூரிலுள்ள AJAX International நிறுவனத்துடனான கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தி, சிங்கப்பூரிலும் கால்பதித்து தனது சர்வதேச அறிமுகத்தை இந்நிறுவனம் அண்மையில் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் இடமளிக்கும் டிஜிட்டல் தளங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய அணுகுமுறை ஆகியவற்றினூடாக, இலங்கையின் காப்புறுதித் துறையில் டிஜிட்டல் பரிணமிப்பிற்கான வழிகாட்டியாக மாறியுள்ள InsureMe, “அனைவருக்கும் காப்புறுதியை கிடைக்கச் செய்ய வேண்டும்” (Make Insurance Easy for Everyone) என்ற தொழிற்துறையின் பணி இலக்கினை முன்னேற்றி வருவதுடன், அது தொடர்ந்தும் நிறுவனத்தின் பிரதான நோக்கமாகவே காணப்படுகின்றது. தற்போது கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதன் மூலமாக InsureMe ன் வளர்ச்சிப் பயணம் மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதன் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்தி, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மகத்தான மட்டத்தில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, அதன் தீர்வுகள் மற்றும் சந்தை விரிவாக்க முயற்சிகளையும் விரைவுபடுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

தனிநபர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு நேரடி காப்புறுதித் தீர்வுகள் மற்றும் காப்புறுதித் தொழில்நுட்ப தளங்களை வழங்குவதற்குப் புறம்பாக, மீள்காப்புறுதித் தரகராகச் செயல்படுவதற்கு இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் உரிமத்தைப் பெற்றுள்ள இலங்கையிலுள்ள ஒரு சில காப்புறுதி இடைத்தரகு சேவை நிறுவனங்களில் ஒன்றாக InsureMe திகழ்ந்து வருகிறது. உள்நாட்டிலும், சர்வதேச ரீதியாகவும் காப்புறுதித் தொழிற்துறையில் ஒட்டுமொத்தமாக 150 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்ட சிரேஷ்ட தலைமைத்துவ அணியின் பலத்துடன், காப்புறுதித் துறையில் இந்நிறுவனத்தின் வலுவான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இது பிரதிபலிக்கின்றது. 

InsureMe ன் தலைவர் பிரஜீத் பாலசுப்பிரமணியம் அவர்கள் இந்த நிகழ்வு குறித்து கருத்து வெளியிடுகையில், “இன்றைய தினம் InsureMe நிறுவனத்திற்கு மாத்திரமன்றி, பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் கனவைச் சுமக்கின்ற இலங்கையிலுள்ள ஒவ்வொரு புத்தாக்குனர்களுக்கும் மைல்கல்லாக மாறியுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் குறைவான வரலாறு கொண்ட தொடக்க வணிக முயற்சியொன்றின் நோக்கம், ஓயாத நெகிழ்திறன், மற்றும் மட்டற்ற வளர்ச்சி ஆகியவற்றிற்கான கொண்டாட்டமாக இது அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. இத்தருணத்தை சாத்தியமாக்குவதில் பெரும்பற்றுடன் உழைத்த தலைமைத்துவம், அர்ப்பணிப்புமிக்க ஊழியர்கள், மற்றும் தொடர்புபட்ட ஏனைய அனைத்து தரப்பினருக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இன்று நீங்கள் எம்மீது வைக்கும் நம்பிக்கையானது நாளைய சாதனைகளுக்கு உந்துசக்தியளிக்கும் என்பதை எமது புதிய முதலீட்டாளர்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.” 

InsureMe ன் இணை ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விபுல தர்மபால அவர்கள் இது குறித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்துகையில், “கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளமை InsureMe ன் வரலாற்றிலும், இலங்கையில் பரந்துபட்ட காப்புறுதித் தொழில்நுட்பத் துறைக்கும் ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. எமது நிதியியல் மற்றும் செயற்பாட்டு ரீதியான முதிர்ச்சியை இது பிரதிபலிப்பது மாத்திரமன்றி, புத்தாக்கமும், வெளிப்படைத்தன்மையும் காப்புறுதித் துறையில் பொதுமக்களின் நம்பிக்கைக்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கும் ஆற்றல் கொண்டவை என்பதன் மீதான எமது நம்பிக்கையையும் புலப்படுத்தியுள்ளது. அனைவரும் காப்புறுதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்க வேண்டும் என்ற எமது நோக்கத்தை பரந்த அளவில் முதலீட்டாளர்கள் மற்றும் தொடர்புபட்ட தரப்பினருக்குக் கிடைக்கச்செய்யும் எமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இம்முயற்சி எமக்கு இடமளிக்கின்றது.” 

கொழும்பு பங்குச் சந்தையில் InsureMe நிரற்படுத்தப்பட்டுள்ளமையானது, பொதுச் சந்தையில் காலடியெடுத்து வைத்துள்ள இலங்கையிலுள்ள ஒரு சில உள்நாட்டு, டிஜிட்டலை முன்னிலைப்படுத்திய நிறுவனங்கள் மத்தியில் அதனை நிலைநிறுத்தியுள்ளது. இந்த மைல்கல் நிறுவனத்தின் தொழில்நுட்பவியல் ரீதியான தலைமைத்துவம் மற்றும் தொழிற்துறையில் அது சம்பாதித்துள்ள நம்பிக்கை ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுவது மாத்திரமன்றி, நாட்டில் வெகுவேகமான விஸ்தரிப்புக் கண்டு வருகின்ற தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகின்றது. 

InsureMe நிறுவனம் குறித்த விபரங்கள் 

2016 ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட InsureMe, இலங்கையின் முன்னணி டிஜிட்டல் காப்புறுதி தொகுப்பாளராகவும், மற்றும் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் கீழ் அனுமதி பெற்ற இடைத்தரகராகவும் இயங்கி வருகின்றது. தொழில்நுட்பத்துடன் கூடிய புத்தாக்கம், நம்பிக்கை, வெளிப்படையான செயல்பாடு, மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் வலுவான அத்திவாரத்துடன் கட்டியெழுப்பட்டுள்ள இந்நிறுவனம், மிகவும் இலகுவான வழியில் எவ்வகையான காப்புறுதித் திட்டமொன்றையும் ஆராய்ந்து, ஒப்பீடு செய்து, மற்றும் கொள்வனவு செய்வதற்கு தனிநபர் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இடமளித்து வருகின்றது. டிஜிட்டலை முன்னிலைப்படுத்திய அதன் செயல்பாட்டு முறைமை, தங்குதடையற்ற இணைய வழி ஆதரவு மற்றும் ஒட்டுமொத்த டிஜிட்டல் வழி இழப்பீட்டுக் கோரல் உதவி ஆகியன நாடெங்கிலும் மக்களும், வர்த்தக நிறுவனங்களும் இலகுவாக, விரைவாக, மற்றும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக காப்புறுதியை மாற்றியமைத்துள்ளன. 

தனது தொழில்நுட்ப அங்கமான DIGIS ஆனது, DIGIEYE (மோட்டார் காப்புறுதி இழப்பீட்டு கோரல்கள் தன்னியக்கமயமாக்கம்), DIGIMED (மருத்துவ இழப்பீட்டுக் கோரல்கள் தன்னியக்கமயமாக்கம்), மற்றும் DIGIEX (நிறுவன ரீதியான செலவுகளை மீளப்பெற்றுக்கொள்ளுதல் தன்னியக்கமயமாக்கம்) போன்ற தளங்களையும் வழங்கி, காப்புறுதித் தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கத்தின் முன்னோடி என்ற தனது ஸ்தானத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அதிநவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த காப்புறுதி மதிப்புச் சங்கிலியில் இழப்பீட்டுக் கோரல்களை நிர்வகித்தல், பணிப்பாய்வுகளை சீரமைத்தல், மற்றும் செயற்பாட்டு திறனை மேம்படுத்தல் ஆகியவற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தி வருகின்றன. அதன் மூலமாக, காப்புறுதியாளர்கள், தரகர்கள், நிறுவனங்கள், மற்றும் காப்புறுதித் திட்டதாரர்களுக்கு தலைசிறந்த அனுபவத்தை வழங்கி வருகின்றன. 

100 க்கும் மேற்பட்ட மிகவும் திறமைவாய்ந்த தொழில் வல்லுனர்களைக் கொண்ட அணியின் வழிநடாத்தல், மற்றும் இலங்கையிலுள்ள பாரிய காப்புறுதி நிறுவனங்கள் அனைத்துடனும் கொண்டுள்ள நீண்ட கால கூட்டாண்மைகள் ஆகியவற்றுடன், உயர் மட்டத்திலுள்ள காப்புறுதி இடைத்தரகர்களின் பட்டியலில் வெகுவேகமாக InsureMe மேலெழுந்து வருவதுடன், அதன் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறுகிய காலத்தில் தொழிற்துறையில் இந்த ஸ்தானத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான புத்தாக்கம், ஆழமான தொழிற்துறை நிபுணத்துவம், மற்றும் இலங்கை மக்கள் அனைவருக்கும் இலகுவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், மற்றும் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும் காப்புறுதியை மாற்றியமைக்கும் ஓயாத அர்ப்பணிப்பு ஆகியவற்றினூடாக, காப்புறுதித் துறையில் டிஜிட்டல் பரிணமிப்பில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை இந்நிறுவனம் தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05