மலையகம்
நானுஓயா மற்றும் மெரயா பகுதிகளில் தாழிறங்கிய பிரதான வீதி!

Dec 1, 2025 - 05:31 PM -

0

நானுஓயா மற்றும் மெரயா பகுதிகளில் தாழிறங்கிய பிரதான வீதி!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நாட்களில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை நிலவியதால் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா எடிம்பிரோ பகுதியிலும் நுவரெலியா - தலவாக்கலை பிரதான சுற்று வீதியில் நானுஓயா சந்திக்கு அருகிலும் மெரயா - டயகாமம் பிரதான வீதியிலும் பல இடங்களில் வீதி தாழிறங்கி கடுமையாக சேதமடைந்துள்ளது. 

எனவே குறித்த பிரதான வீதிகள் தாழிறங்கியதை அடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஒரு சில இடங்களில் ஒரு வழியில் மாத்திரம் தற்போது வாகனங்கள் பயணிக்க கூடியதாக உள்ளது. 

இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத வீதிகளில் முன் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையினை அவதானிக்க வேண்டும் எனவும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இலகு வாகனங்கள் பயணம் செய்ய கூடிய வீதிகளில் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும் நானுஓயா பொலிஸார் மற்றும் லிந்துலை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

மேலும் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவுகள் ஏற்படுவதற்கு பல வெடிப்புக்கள் உள்ளதாகவும் பிரதான வீதி தாழிறங்கும் அபாயகரமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனால் இதனால் பொது மக்களை அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05