Dec 1, 2025 - 06:00 PM -
0
2025 ஆம் ஆண்டின் IDC ஆசியா/பசிபிக் தொழில்நுட்ப கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் விழாவில், Huawei நிறுவனம் மூன்று முக்கிய விருதுகளை வென்றுள்ளது. Shandong துறைமுக குழுமத்தின் Yantai துறைமுகம் மற்றும் Shenzhen பெருந்தரவு வளங்கள் மேலாண்மை நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து இரண்டு சிறப்பு எதிர்கால வணிக விருதுகளையும் (FEA - Future Enterprise Awards), சீனா மொபைல் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஹொங்கொங்கில் மேலும் ஒரு சிறப்பு FEA விருதையும் வென்றுள்ளது.
இந்த ஆண்டு விருது பெற்றவர்கள் டிஜிட்டல் முன்னேற்றத்தின் அடுத்த நிலையை எட்டியவர்கள் என IDC கூறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, தரவு மற்றும் நிலைபேறாண்மை ஆகியவை ஒன்றிணைந்து வணிக மதிப்பையும் சமூக தாக்கத்தையும் உருவாக்கும் புதிய யுகத்தின் முன்னோடிகளாக இவர்கள் திகழ்கின்றனர். யான்டாய் (Yantai) துறைமுகத்தின் “Smart Eco-port” டிஜிட்டல் மாற்றுத் திட்டம் இந்த ஆண்டின் “Smart Cities – Best in Connected City” சிறப்பு விருதைப் பெற்றுள்ளது.
Huawei மற்றும் Shandong மாகாணத்திலுள்ள இணைந்து உருவாக்கிய டிஜிட்டல் மேலாண்மை தளம் ஒரு முன்னோடி சாதனையாகும். 17 வணிக அமைப்புகளை ஒருங்கிணைத்து, 280 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளைத் தொகுத்து, 166 தரவு சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டம் நிறுவனத்தின் முழுமையான தரவு மேலாண்மையை சீரமைத்து, செயல்பாடுகளை தெளிவாக காட்சிப்படுத்தி, மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்தி, அறிவார்ந்த முடிவெடுப்பை எளிதாக்குகிறது.
இந்தத் தளம் செயல்பட்டு வரும் காலத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடைந்துள்ளது: செயல்பாட்டுத் திறன் 15% அதிகரித்துள்ளது. மின்சக்தி நுகர்வு 8%குறைந்துள்ளது, பராமரிப்புச் செலவில் 15% குறைவு மற்றும் இயந்திரங்கள் பழுதாவது 40% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இவை அனைத்தும் நிறுவனத்தின் உயர்தர வளர்ச்சிக்கு வலுவான உந்துசக்தியாக அமைந்துள்ளன.
Shenzhen Big Data Resource Management Center-இன் City Data Center திட்டம், இந்த ஆண்டின் “Smart Cities – Best in Digital Policies”சிறப்பு விருதைப் பெற்றுள்ளது. “முழு நகருக்கும் 1 கிளவுட் + 1 நெட்வொர்க் + 1 அடித்தளம்” என்ற டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கியுள்ள இத்திட்டம், மின்சக்தி பயன்பாட்டுத் திறனை (PUE) 1.6-லிருந்து 1.3-க்குக் கீழே குறைத்துள்ளது. இதன்மூலம் வருடத்திற்கு 20% மின்சாரம் சேமிக்கப்படுகிறது. Huawei CloudOps தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 1,100 க்கும் மேற்பட்ட முக்கிய வணிக அமைப்புகள் Meilin Data Center இலிருந்து Bantian City Big Data Center இற்கு எந்த இடமாற்றத் தோல்வியும் அல்லது தரவு இழப்பும் இன்றி முழுமையாக மாற்றப்பட்டன.
MindOps தளத்தின் மூலம் 8,000-க்கும் மேற்பட்ட அறிவார்ந்த கணினி மற்றும் பொதுவான கணினி சாதனங்கள் தற்போது மையப்படுத்தப்பட்ட முறையில் நிர்வகிக்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த டிஜிட்டல் காட்சிப்படுத்தல் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு முறையின் மூலம் செயல்திறன் 20%-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
China Mobile International Limited நிறுவனத்தின் ஹொங்கொங் FoTan Data Center திட்டம், இந்த ஆண்டின் ஹொங்கொங் பிராந்திய “Best in Sustainability” Excellence Award விருதைப் பெற்றுள்ளது. ஹொங்கொங்கில் அடுத்த தலைமுறை மிகப்பெரிய டிஜிட்டல் உட்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், Huawei-இன் BestDC டிஜிட்டல் தளத்தைப் பயன்படுத்தி, மிக உயர்ந்த நிலையான LOD500 அளவுகோலுக்கு இணையான Building Information Modeling (BIM) வடிவமைப்பை செயல்படுத்துகிறது. இந்த தரவு நிலையம் 10,000-க்கும் மேற்பட்ட ரேக்குகளுக்கு சர்வர் திறனை வழங்குவதுடன், தொகுதி அமைப்பில் உருவாக்கப்பட்ட UPS அமைப்பையும் இணைக்கிறது.
மேலும், அறிவார்ந்த எரிசக்தி மற்றும் குளிரூட்டல் மேலாண்மை மையத்தின் மூலம், தொழில்துறையில் முன்னணியில் உள்ள 1.3-க்கும் குறைவான வருடாந்த PUE-ஐ அடைந்துள்ளது. இது கார்பன் டை ஆக்சைடு (carbon dioxide) வெளியேற்றத்தை 30%-க்கும் மேல் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சக்திவாய்ந்த கணினி திறன்களை வழங்குவதுடன், இத்திட்டம் ஹொங்கொங்கில் பசுமை தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கிறது.

