Dec 1, 2025 - 06:33 PM -
0
அவசரகாலச் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் தேவையான தீர்மானங்களை எடுக்கும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று (01) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார்.
நிலத்தின் உரிமையைக் கருத்தில் கொள்ளாமல், 10,000 ரூபா பணம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தோட்ட வீடுகளுக்கும் கூட இந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அனைத்து பிரதேச செயலகங்கள் மூலமாகவும் விநியோகிக்கப்படுகிறது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, நாம் இந்த அலுவலகத்தின் மூலம் தீர்மானங்களை மேற்கொள்வோம்.
உள்ளூராட்சி மன்றங்களின் கட்டளைச் சட்டத்தின்படி, ஒரு உள்ளூராட்சி மன்றத்திலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லவோ அல்லது ஊழியர்கள் வேறொரு உள்ளூராட்சி மன்றத்திற்குச் சென்று பணியாற்றவோ உரிமை இல்லை. இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, அவர்களுக்கு அவ்வாறு செயல்பட நாம் அனுமதி அளித்துள்ளோம்.

