Dec 1, 2025 - 07:03 PM -
0
நாட்டில் தற்போது நிலவும் பேரிடர் நிலைமை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் காமென் மொரெனோவும் (Carmen Moreno) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இன்று (01) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
டித்வா சூறாவளி புயலால் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலைமை குறித்து இரு தரப்பினரும் இங்கு நீண்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
தற்போதைய பேரிடர் நிலைமை மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நிலைமைகளை கடந்து செல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தால் முடிந்த அதிகபட்ச பங்களிப்பை நாட்டுக்குப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் கௌரவமாக கேட்டுக்கொண்டார்.
மேலும், அத்தியாவசிய சேவைகளை, வைத்தியசாலைகளின் சேவைகளை முறையாகப் பேணிச் செல்வதற்கும், சேதமடைந்த ரயில் போக்குவரத்து பாதைகள் கட்டமைப்பு மற்றும் வீதிக் போக்குவரத்து கட்டமைப்புகளைப் புனர்நிர்மாணம் செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் தேவையான ஆதரவைப் பெற்றுத் தருமாறும், ஐரோப்பிய ஒன்றியம் தலைமையிலான உலகத் தலைவர்களால் பெற்றுத் தரப்படும் ஆதரவுகள் இந்நேரத்தில் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கேட்டுக்கொண்டார்.

