Dec 1, 2025 - 07:22 PM -
0
முக்கியமான மரக்கறிகள் விநியோகப் பகுதிகளான பதுளை மாவட்டத்தின் வெலிமடை, கெப்பெட்டிப்பொல போன்ற பொருளாதார மையங்களுக்கு, கோவா, கரட், போஞ்சி போன்ற முக்கிய மரக்கறி வகைகள் அதிக அளவில் கிடைத்து வருவதாக விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, தற்போது திறக்கப்பட்டுள்ள எல்ல - வெல்லவாய வீதி போன்ற வழிகளைப் பயன்படுத்தி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு இலகுவாகக் கிடைக்கும் வகையில், மரக்கறிகளை எடுத்துச் செல்லும் வர்த்தகர்கள், அதற்கு தேவையான போக்குவரத்து நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தச் சிரமமான நேரத்தில் பொதுமக்களுக்குச் சாதாரண விலையில் மரக்கறிகளை வழங்குவதற்கு வர்த்தர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

