செய்திகள்
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Dec 3, 2025 - 09:00 AM -

0

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

பாராளுமன்றம் நடவடிக்கைகள் இன்று (03) காலை 09.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது. 

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் பின்வருமாறு,


மு.ப. 09.00 – மு.ப. 09.30: பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளன. 

மு.ப. 09.30 – மு.ப. 10.00: வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மு.ப. 10.00 – மு.ப. 10.30: பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

முற்பகல் 10.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது. இதில் பின்வரும் அமைச்சுகளின் செலவுத் தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படும்: 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு 

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு 

மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையுடன் இன்றைய பாராளுமன்ற அமர்வு நிறைவடையவுள்ளது.

 

Comments
0

MOST READ
01
02
03
04
05