செய்திகள்
வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு புதிய உறுப்பினர் தெரிவு

Dec 3, 2025 - 12:54 PM -

0

வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு புதிய உறுப்பினர் தெரிவு

வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நெய்யா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹீர் பெயரிடப்பட்டுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் இந்தப் பெயர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகக் கடமையாற்றிய முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது அண்மையில் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்தே குறித்த பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியிருந்தது.

Comments
0

MOST READ
01
02
03
04
05