செய்திகள்
முன்னாள் எம்.பி விமல் வீரவன்சவுக்குப் பிடியாணை

Dec 3, 2025 - 01:25 PM -

0

முன்னாள் எம்.பி விமல் வீரவன்சவுக்குப் பிடியாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

 

ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு 09 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05