Dec 3, 2025 - 01:33 PM -
0
Best Corporate Citizen Sustainability Awards 2025 விருதுகள் நிகழ்வில் மிகச் சிறந்த அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள நெஸ்லே லங்கா நிறுவனம்ரூபவ் கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் தொடர்ந்து காண்பித்து வந்துள்ள அர்ப்பணிப்பு மற்றும் நல்முயற்சிகள் சார்ந்த தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றுக்காக சமூக நிலைபேறு - மக்கள் என்பதற்கான Triple Bottom Line விருது Environment Beyond Business (வணிகத்திற்கு அப்பால் சூழல் மீதான அக்கறை) பிரிவுக்கான விருது Employee Relations (ஊழியர்களுடனான உறவுகள்) பிரிவுக்கான விருது Customer Relations (வாடிக்கையாளர்களுடனான உறவுகள்) பிரிவுக்கான விருது மற்றும் சுற்றுச்சூழல் மீதான அர்ப்பணிப்பு சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு மற்றும் ஊழியர்களுடனான உறவுகள் குறித்த மூன்று விருதுகள் அடங்கலாக பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏழு விருதுகளை தனதாக்கி சாதனை படைத்துள்ளது.
“Best Corporate Citizen Sustainability Awards 2025 நிகழ்வில் ஈட்டியுள்ள வெற்றிகளை நாம் பணிவுடன் ஏற்றுக்கொள்கின்றோம். நெஸ்லே நிறுவனத்தைப் பொறுத்தவரையில் எமது செயற்பாடுகள் அனைத்தும் நிலைபேற்றியலை மையப்படுத்தியுள்ளதுடன் இத்தகைய மதிப்புமிக்க மேடையொன்றில் எமது முன்னேற்றத்தைப் பகிர்வது உண்மையில் மிகப் பெரும் கௌரவம் என்பதுடன் நிலைபேற்றியலில் இலங்கை எவ்வாறு முன்னேற்றம் கண்டு வருகின்றது என்பதைக் காண்பது மிகவும் உத்வேகமளிக்கின்றது. எமது மதிப்புச் சங்கிலியின் மத்தியில் எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து இன்னும் சிறப்பான அளவில் நெகிழ்திறனையும் மற்றும் நிலைபேற்றியலையும் கொண்ட நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து சிறப்பான காரியங்களை ஆற்றி வருகின்ற எமது பயணத்தை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுப்பதற்கு பாரிய உந்துசக்தியாக இந்த அங்கீகாரம் காணப்படுகின்றது. 'நல்லுணவு நல்வாழ்வு' என்ற எமது வாக்குறுதியைத் தொடர்ந்தும் சிறப்பாகக் கட்டிக்காத்து இலங்கையில் எதிர்வரும் தலைமுறைகளுக்கும் சிறப்பான வாழ்வுக்கு வித்திடும் முயற்சிகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்' என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. பேர்ணி ஸ்டெஃபான் அவர்கள் குறிப்பிட்டார்.
அனைத்து வணிகச் செயற்பாடுகளிலும் நிலைபேற்றியலை உட்புகுத்தியுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் மற்றும் பூமிக்கும் நன்மைபயக்கின்ற வகையில் குறிப்பிடத்தக்க பல முயற்சிகளை நெஸ்லே நிறுவனம் தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து முன்னெடுத்து வருகின்றது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்ற இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க வர்த்தகத்துறை அங்கீகாரமாக Best Corporate Citizen Sustainability (BCCS) விருதுகள் அமைந்துள்ளதுடன் மக்கள் பூமி மற்றும் இலாபம் ஆகிய மூன்று தூண்கள் மீது வலுவான கவனம் செலுத்தி நிலைபேற்றியலை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனங்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகின்றது. வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற இவ்விருதுகள் உள்நாட்டு பொருளாதாரம் சமூகம் மற்றும் நிறுவன நிலைபேற்றியல் ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த பங்களிப்புக்களை ஆற்றியுள்ள நிறுவனங்களைப் போற்றிக் கொண்டாடுகின்றது.
'இன்றும் எதிர்வரும் தலைமுறைகள் மத்தியிலும் அனைவரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு உணவின் ஆற்றலை வெளிக்கொண்டு வருதல்' எனும் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்கின்ற நெஸ்லே உயர் தர உணவு மற்றும் பான வகைகளுடன் இளமை முதல் முதுமை வரை தலைமுறை தலைமுறையாக இலங்கை மக்களை வளப்படுத்தியுள்ளது. 1906 ம் ஆண்டில் இலங்கையில் தனது செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளதுடன் இன்று இலங்கை மக்களின் வாழ்வுகளில் ஒரு உள்ளங்கமாகவே நெஸ்லே மாறியுள்ளது. இலங்கையில் 15,000 க்கும் மேற்பட்ட பாலுற்பத்தியாளர்கள் தென்னம் தோட்டக்காரர்கள் மற்றும் வீடுகளில் தென்னை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்கு பங்களித்து வருவதுடன் 700 க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பினையும் வழங்கியுள்ளது. இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்ற அதன் தயாரிப்புக்களின் 90% இற்கும் மேற்பட்டவற்றை கடுமையான பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளுடன் குருணாகலிலுள்ள அதன் அதிநவீன தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகின்றது.

