வணிகம்
Faldo Junior Golf & Pro-Am 2026 நிகழ்வுக்கு DFCC வங்கி தொடர்ந்து 2 வது ஆண்டாகவும் வலுவூட்டுகின்றது

Dec 3, 2025 - 01:41 PM -

0

Faldo Junior Golf & Pro-Am 2026 நிகழ்வுக்கு DFCC வங்கி தொடர்ந்து 2 வது ஆண்டாகவும் வலுவூட்டுகின்றது

Faldo Junior Golf Tournament & Pro-Am நிகழ்வுக்கான தனது அனுசரணை குறித்து DFCC வங்கி மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகள் கொண்ட கூட்டாண்மையின் கீழ் தற்போது 2 வது தடவையாகவும் இவ்வனுசரணையை அது வழங்கியுள்ளது. 2026 ம் ஆண்டு நிகழ்வானது ஜனவரி 4 முதல் 8 வரை றோயல் கொழும்பு கோல்ஃப் கிளப் ஆடுகளத்தில் (Royal Colombo Golf Club - RCGC) இடம்பெறவுள்ளதுடன், இளம் திறமைசாலிகளும், DFCC வங்கியின் உயர் வகுப்பு வாடிக்கையாளர்களும் அர்த்தம் நிறைந்த விளையாட்டு அனுபவத்தை வளர்ப்பதில் ஈடுபட்டு, தமது திறமைகளைக் காண்பிக்கவுள்ளனர். 

கடந்த ஆண்டில் இலங்கையில் முதல்முறையாக இடம்பெற்ற நிகழ்வில் வெளியூர்களிலிருந்து வந்தவர்கள், சர்வதேச விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 110 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்ததுடன், ஜீவன் சதாசிவம் மற்றும் காயா தளுவத்த போன்ற உள்நாட்டு வெற்றியாளர்கள் பிராந்திய மட்ட இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியிருந்தனர். 

கடந்த ஆண்டு நிகழ்வை அத்திவாரமாகக் கொண்டு இவ்வாண்டு சுற்றுப்போட்டி மேலும் சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கனிஷ்ட வீரர்கள் மத்தியில் போட்டிச் சூழலை மேம்படுத்தி, DFCC வங்கியின் Pinnacle மற்றும் செல்வந்த வாடிக்கையாளர்களுடனான ஈடுபாடுகளை மேம்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். ஜனவரி 4 அன்று DFCC Bank Pro-Am உடன் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், வங்கியின் செல்வந்த வாடிக்கையாளர்களும், கனிஷ்ட வீரர்களும் விளையாடுவதற்கான பிரத்தியேக நிகழ்வாக அமையவுள்ளது. அதனைத் தொடர்ந்து பயிற்சிச் சுற்றுக்கள் ஜனவரி 5 அன்றும், கனிஷ்ட வீரர்களுக்கான பிரதான போட்டிகள் ஜனவரி 6 முதல் 8 வரையும் இடம்பெறவுள்ளதுடன், இறுதித்தினத்தில் பரிசு வழங்கும் வைபவத்துடன் நிகழ்வுகள் நிறைவடையும். 

DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “கைத்தொழில் முதல் புத்தாக்கம் வரையோ அல்லது வீடுகள் முதல் தொழில் முயற்சியாளர்கள் வரையோ, DFCC வங்கி எப்போதும் இலங்கையின் அபிவிருத்தியுடன் இணைந்து பயணித்து வருகின்றது. Faldo Junior Golf சுற்றுப்போட்டியின் மூலமாக, தமது வெற்றிகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் ஆற்றல் கொண்ட இளம் கோல்ஃப் வீரர்கள் மீது முதலீடுகளை மேற்கொள்வதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். இது வெறுமனே விளையாட்டு என்பதற்கும் அப்பாற்பட்டது. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்விலும் ஒழுக்கம், தன்னம்பிக்கை, மற்றும் வாய்ப்புக்களை வளர்க்கும் ஒரு களமாக இது அமைந்துள்ளது. அவர்கள் தமது இலட்சியங்களுடன், எதிர்காலத்தை நோக்கி அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போது அவர்களுக்கு துணை நிற்பது எமக்குக் கிடைக்கப்பெற்ற பெரும் பாக்கியமாக நாம் கருதுகின்றோம்.” ஆறு தடவைகள் மேஜர் சாம்பியனாகத் திகழ்ந்த சேர் நிக் ஃபால்டோ அவர்களால் 1996 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Faldo போட்டித்தொடர், உலகில் மிகவும் மதிக்கப்படுகின்ற கனிஷ்ட மட்ட கோல்ஃப் களங்களில் ஒன்றாகத் தொடர்ந்தும் திகழ்ந்து வருகின்றது. 28 க்கும் மேற்பட்ட நாடுகளில் இது இடம்பெற்று வருவதுடன், ஆண்டுதோறும் 7,000 க்கும் அதிகமானோர் பங்குபற்றி வருகின்றனர். வளர்ந்து வருகின்ற உயர் வகுப்பு கோல்ஃப் திறமைசாலிகளுக்கான முதன்மையான பயிற்சிக் களம் என்ற நன்மதிப்பை இப்போட்டித் தொடர் சம்பாதித்துள்ளது. சர்வதேச கனிஷ்ட கோல்ஃப் மட்டத்தில் பிரபலமடைந்து வருகின்ற ஒரு நாடாக இலங்கையை நிலைநிறுத்துவதில் இது முக்கியமானதொரு படியாக மாறியுள்ளது. 

RCGC ஐச் சேர்ந்த கேப்டன் கிஹான் சிரிபத்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “Faldo போட்டித்தொடர் வெறுமனே ஒரு சுற்றுப்போட்டி என்பதற்கும் அப்பாற்பட்டது. இளம் கோல்ஃப் வீரர்கள் தமது திறமைகளைச் சோதித்து, சவால்களைக் கையிலெடுத்து, சர்வதேச போட்டியின் விறுவிறுப்பை அனுபவிப்பதற்கான ஒரு களத்தை இது அவர்களுக்கு வழங்குகின்றது. இந்நிகழ்வை மீண்டும் ஒரு முறை நடாத்துவதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், இலங்கையில் கோல்ஃப் விளையாட்டை வளர்த்து, எதிர்கால சாம்பியன்களை உருவாக்குவதில் DFCC வங்கி தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆதரவுக்காக நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.” பாரம்பரியான மையங்களுக்கு அப்பால் திறமைசாலிகளை இனங்கண்டு, நாடெங்கிலுமிருந்து கோல்ஃப் வீரர்களுக்கு சர்வதேச மட்டத்தில் பிரகாசிப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்குவதில் இரு தரப்பும் தமக்கிடையில் பகிர்ந்து கொண்டுள்ள இலட்சியத்தை DFCC வங்கி மற்றும் RCGC இடையிலான இந்த ஒத்துழைப்பு எடுத்துக்காட்டுகின்றது. 

DFCC வங்கி குறித்த விபரங்கள் 

1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது. 

வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 133 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 6,000 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது. நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05