வணிகம்
குழு மனப்பான்மையை வளர்ப்பத்தற்காக செலிங்கோ லைஃப் விளையாட்டு விழா 2025 ஒழுங்கமைத்தது

Dec 3, 2025 - 03:35 PM -

0

குழு மனப்பான்மையை வளர்ப்பத்தற்காக செலிங்கோ லைஃப் விளையாட்டு விழா 2025 ஒழுங்கமைத்தது

செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விளையாட்டுத் திருவிழா 2025 (ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல்ஸ) அண்மையில் டொரிங்டன் மைதானத்தில் வண்ணமயமான காட்சிகளும் போட்டியுணர்வும் நிரம்பிய விழாவாக நடைபெற்றது. இவ்வாண்டில் நிறுவனத்தின் மிகப்பெரிய விளையாட்டு விழாவாகக் கருதப்படும் இந்த நிகழ்வில், அனைத்து முக்கிய விற்பனைப்பிரிவுகளிலுருலம் தலைமையகத்திலுருற்றும், சிரேஷ்ட முகாமைத்துவப்பிரிவிலும் இருந்தும் சுமார் 1,200 பேர் கலந்து கொண்டனர். 

இந்த ஆண்டின் விழாவானது, செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கும் நலத்திற்குமான அர்ப்பணிப்பை மட்டுமின்றி, 20 முதல் 65 வயது வரையிலான பல தலைமுறை சக ஊழியர்களை ஒன்றிணைத்ததாக அமைந்திருந்தது. சுருக்கமாக கூறினால் இது அனைவரையும் இணைத்துக் கொள்ளும் பண்பையும், ஒன்றுபட்ட பணியிட கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 100 மீட்டர் ஓட்டத்திலிருந்து 1,500 மீட்டர் ஓட்டம் வரை, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோல்பந்தெறிதல், வட்டெறிதல் போன்ற முழுமையான தடகள போட்டிகள் டொரிங்டன் மைதானத்தை முழுவதும் உற்சாகத்தால் குலுங்கச் செய்தன. நடைப் போட்டியும் உற்சாகமான கயிறு இழுத்தலும் நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரஸ்யத்தை சேர்த்தன. 

இந்த ஆண்டின் விழா, செப்டம்பரில் நடைபெற்ற குழு விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. அந்த போட்டிகளில் கிரிக்கெட், பூப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் இடம்பெற்று, இறுதிபோட்டிக்கான சரியானதளத்தை அமைத்தன. 

மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டபோது, PK குழு மொத்தவிளையாட்டின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதுடன் NS/KS குழு ரன்னர்அப்இடத்தினைக் கைப்பற்றியது. தனிநபர் சாதனைகளும் சிறப்பாகத் திகழ்ந்தன. ST குழுவின் டபிள்யு.டீ.வி கவிந்த சிறந்த ஆண் தடகள வீரர் விருதினை வென்றார் TV குழுவின் ஏ.டீ சாகரிகா சிறந்த பெண் தடகள வீரர்விருதினை கைப்பற்றினார். இதன் மூலம் குழுப் பண்பு, திறமை, மற்றும் விளையாட்டு மீதான ஆர்வம் ஆகியவற்றை கொண்டாடிய நாள் முழுமை பெற்றது. 

செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் விளையாட்டுக்கழக தலைவர் சமத் அல்விஸ் கூறுகையில், இந்த விளையாட்டு விழா நிறுவனத்தில் நேர்மறையான பணியிட கலாசாரத்தை ஊக்குவிப்பதோடு, அதன் ஊழியர்களையும் முகவர் படையையும் ஆதரிக்கும் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது என்று தெரிவித்தார். 'செலிங்கோ லைஃப் நிறுவனத்தில்,எமது ஊழியர்களிடையே ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவது எமது நோக்கத்திற்கு அடிப்படையானது என்று நாம் நம்புகிறோம். விளையாட்டு விழா என்பது நாம் ஒன்றிணைந்து, சாதனைகளைக் கொண்டாடவும், சிறந்து விளங்குவதற்கும் ஊழியர் ஈடுபாட்டிற்கும் எமது உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும் ஒரு அற்புதமான வாய்ப்பாகும், என்று அவர் மேலும் கூறினார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05