Dec 3, 2025 - 03:46 PM -
0
தித்வா புயலால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் போது, இலங்கை மக்கள் நம்பகமான மற்றும் சமீபத்திய தகவல்களைப் பெற உதவும் வகையில் TikTok புதிய தேடல் வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான தவறான தகவல் பரவுவதைத் தடுத்து, உண்மையான விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான TikTok-இன் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த வழிகாட்டி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்கும்.
TikTok-இல் வெள்ளம் பற்றிய செய்திகளைத் தேடும் இலங்கை பயனர்களுக்கு, நம்பகமான இடங்களில் இருந்து தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்கும் முக்கிய அறிவிப்பு காட்டப்படும். இந்த வழிகாட்டி, பயனர்களை நேரடியாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் (DMC) இணைக்கிறது.
அங்கிருந்து இயற்கைப் பேரிடர்கள் குறித்த சரியான தகவல்களைப் பெறலாம். மேலும், TikTok-இன் பாதுகாப்பு நிலைய ஆதாரங்களையும், துயரமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடைமுறை உதவிகளை வழங்கும் துயர நிகழ்வு ஆதரவு வழிகாட்டிக்கான நேரடி இணைப்பையும் இது வழங்குகிறது. இயற்கைப் பேரிடர்கள் முதல் தனிப்பட்ட இழப்புகள் வரையிலான துயர நிகழ்வுகள் என்ன என்பதை இந்த வழிகாட்டி விளக்குகிறது. மேலும், மனநல ஆதரவை எவ்வாறு பெறுவது, இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்பான உள்ளடக்கங்களை எப்படிப் பொறுப்பான முறையில் பகிர்வது அல்லது புகாரிப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் பயனர்களுக்கு அளிக்கிறது.
“மக்கள் மிகவும் அவசியமாகத் தேவைப்படும் தருணத்தில், துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களைக் கண்டறிய உதவுவதே இந்த தேடல் வழிகாட்டியின் குறிக்கோள்.” என்று TikTok-இன் தெற்காசிய பொதுக் கொள்கை மற்றும் அரசு உறவுகள் தலைவர் ஃபெர்தௌஸ் மொட்டாகின் தெரிவித்தார். “தேடல் முடிவுகளில் சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களை நேரடியாக இணைப்பதன் மூலம், சமூகங்கள் உத்தியோகபூர்வ வழிகாட்டுதல்கள், உணர்வு சார்ந்த ஆதரவு கருவிகள் மற்றும் பாதுகாப்பு தகவல்களை தளத்திலேயே விரைவாகவும் நம்பத்தகுந்த முறையிலும் அணுகுவதை உறுதிசெய்கிறோம். நெருக்கடி சூழல்களில் பொறுப்புள்ள தகவல் பகிர்வை வலுப்படுத்தவும், பயனர்களுக்கு ஆதரவு வழங்கவும் இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நம்பகமான தகவல்களை முன்னிலைப்படுத்தி, தனது சமூகத்திற்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்கும் TikTok-இன் பரந்த இலக்குகளின் தொடர்ச்சியாக இந்த அறிமுகம் அமைகிறது. இந்த கருவிகளை பயனர் அனுபவத்தில் நேரடியாக ஒருங்கிணைப்பதன் மூலம், TikTok தனது சமூகத்திற்கு அர்த்தமுள்ள ஆதரவையும் நம்பத்தகுந்த தகவல்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், தங்கள் நல்வாழ்வைப் பேணவும், மிக முக்கியமான தருணங்களில் பொறுப்புடன் செயல்படவும் வசதியளிக்கும் இடமாக இருப்பதில் இந்த தளம் தொடர்ந்து உறுதியாக உள்ளது.
மேலதிக விபரங்களுக்கு, TikTok-இன் பாதுகாப்பு நிலையத்தைப் பார்வையிடவும்: www.tiktok.com/safety

