செய்திகள்
தற்போதைய நிலைக்கு அமைய சரியான கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்

Dec 3, 2025 - 04:30 PM -

0

தற்போதைய நிலைக்கு அமைய சரியான கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்

தற்போது ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளின் காரணமாக நாம் தந்திரோபாய ரீதியில் செயற்பட வேண்டியுள்ளதுடன், எமது வரவு செலவுத் திட்டத்திலும் தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு - 2025 இல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

முதலீடுகளுக்கான தேவையான பின்னணியையும் சூழலையும் சரியாக அமைத்துக் கொள்ளாவிட்டால், எம்மால் மீண்டும் கட்டியெழுப்பவும் எமது நீண்டகால இலக்குகளை அடையவும் முடியாது போய்விடும். 

இந்த அழிவிலிருந்து மீள முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டுமாயின், நாம் நமது பொருளாதாரத்தை வலுவாகவும், தாக்குப் பிடிக்கும் தன்மையை கொண்டதாகவும் வைத்திருக்க வேண்டும். 

நிதி ஒதுக்கீட்டைப் போலவே, சரியான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும் மிக முக்கியமானதாகும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05