Dec 3, 2025 - 06:57 PM -
0
UPDATE - 7.45pm
கொஸ்கம, பொரலுகொட பிரதேசத்தில் இன்று (3) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் தற்போது அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காயமடைந்தவர் 40 வயதுடைய ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளமை தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் அல்லது பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தொடர்பில் இதுவரை தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக கொஸ்கம பொலிஸார் உள்ளிட்ட 4 பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
………….
கொஸ்கம - பொரலுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

