Dec 3, 2025 - 09:37 PM -
0
இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள அனர்த்த நிலையின் பின்னர் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சீரமைப்புப் பணிகளுக்காக, பங்களாதேஷ் அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று இன்று (03) பிற்பகல் நாட்டை வந்தடைந்தது.
அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான 'C-130' விமானம் ஒன்றே இவ்வாறு வந்ததுடன், அதில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்குகின்றன.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸினால் நிவாரணப் பொருட்கள் முறைப்படி கையளிக்கப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மயூரி பெரேரா அப்பொருட்களைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

