Dec 4, 2025 - 07:07 AM -
0
கண்டி - கொழும்பு பிரதான வீதி மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த வீதி நேற்று (3) மாலை முதல் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரம் அந்த வீதியூடாக பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அந்த வீதியூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

