செய்திகள்
மீட்பு பணிகளை தொடரும் முப்படையினர்

Dec 4, 2025 - 07:44 AM -

0

மீட்பு பணிகளை தொடரும் முப்படையினர்

பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான மீட்பு பணிகளுக்காக முப்படையைச் சேர்ந்த 28,500 சிப்பாய்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்தார். 

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 31,057 நபர்களை மீட்பதற்கு முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். 

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்ட தொலைத்தொடர்பு கட்டமைப்பில் தற்போது 75 சதவீதத்திற்கும் அதிகமானவை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதன் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் குறிப்பிடுகையில், தடைப்பட்ட ஃபைபர் இணைப்புகள் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 

இதேவேளை, அனர்த்த நிலைமையின் போது நாட்டிற்கு வருகை தந்த எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. 

அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் கூறுகையில், அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் தற்போது பிரவேசிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05