செய்திகள்
குரூப் கப்டன் நிர்மாலின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் அஞ்சலி

Dec 4, 2025 - 03:03 PM -

0

குரூப் கப்டன் நிர்மாலின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் அஞ்சலி

வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். 

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் உத்தியோகபூர்வ பணிகளுக்காக மேற்கொண்ட பல பயணங்களில் குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டிய விமானியாக இணைந்து செயற்பட்டிருந்தார். 

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் இராணுவப் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களும் இன்று (04) முற்பகல் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 

பூதவுடல் மீதான இறுதிச் சடங்குகள் தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05