வணிகம்
‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம் நிதியத்திற்கு’ ரூபா 600 இலட்சம் தொகையைப் பங்களித்துள்ள ஹட்ச், தேசத்தை மீளக்கட்டியெழுப்பும் முயற்சியில் கைகோர்த்துள்ளது

Dec 5, 2025 - 08:40 AM -

0

‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம் நிதியத்திற்கு’ ரூபா 600 இலட்சம் தொகையைப் பங்களித்துள்ள ஹட்ச், தேசத்தை மீளக்கட்டியெழுப்பும் முயற்சியில் கைகோர்த்துள்ளது

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புவோம் நிதியத்திற்கு’ ரூபா 600 இலட்சம் தொகையை தனது உடனடிப் பங்களிப்பாக ஹட்ச் நிறுவனம் நன்கொடையளித்துள்ளது. 

CK Hutchison குழுமத்தின் துணை நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள இந்நிதி, பாதிக்கப்பட்டுள்ள சமூகங்கள் மத்தியில் பொது உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்பி, வாழ்வாதாரங்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவும். 

இந்த நிதியுதவிக்கு மேலதிகமாக, இலவச அழைப்புக்கள், டேட்டா, மற்றும் எஸ்எம்எஸ், மொபைலை சார்ஜ் செய்யும் சாவடி வசதிகளுடன் தொடர்பாடல்களை பேணுவதற்கும், வலையமைப்பு கோபுரங்களில் தேவையான திருத்த வேலைகளை எவ்வித தாமதங்களுமின்றி உடனடியாக மேற்கொள்வதற்கு தனது பொறியியலாளர்களை ஆகாய மார்க்கமாக அனுப்பியும் நேரடி உதவி நடவடிக்கைகளை ஹட்ச் முன்னெடுத்துள்ளது. 

“இத்தகைய அனர்த்த நிலைமையின் போது மக்கள் மத்தியில் தொடர்பாடல்களைப் பேணி, அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதே எமது தலையாய பொறுப்பாகும்,” என்று ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சௌமித்ர குப்தா அவர்கள் குறிப்பிட்டார். “மீளக்கட்டியெழுப்பும் இப்பயணத்தில் எமது குழுமத்தின் ஆதரவுடன், இலங்கைக்கு உறுதுணையாக நிற்பதில் நாம் பெருமை கொள்கின்றோம். இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதில் உடனடி மற்றும் தீர்க்கமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளமைக்காக இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுங்குமுறை ஆணைக்குழு, டிஜிட்டல் அமைச்சு, பாதுகாப்புப் படைகள், மற்றும் அரசாங்கத்திற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.” 

இந்த நன்கொடை மற்றும் அதன் தொடர்ச்சியான நிவாரண உதவி முயற்சிகள் மூலமாக, அவசர உதவிகள் தேவைப்படும் நேரங்களில் தனது சமூகங்களுக்கு உதவி, இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை மேம்படுத்துவதில் நீண்ட கால கூட்டாளராகச் செயற்பட்டு வருவதில் தான் காண்பிக்கும் அர்ப்பணிப்பை ஹட்ச் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05