Dec 5, 2025 - 11:56 AM -
0
INSEEஇன் நிலைத்தன்மைக்கான இலட்சியம் 2030இன் கீழ் சமூகம் மற்றும் பங்காளர்களிற்கான நோக்கத்துடன் இணைந்து INSEE சீமெந்து, காலியில் உள்ள INSEE உருஹுணு சீமெந்து ஆலை, புத்தளம் சீமெந்து ஆலை (PCW) மற்றும் அருவக்காறு குவாரி ஆகியவற்றில் தொடர் சமூக மருத்துவ முகாம்களை நடாத்தியது.
இம் முன்முயற்சி காலி, புத்தளம் மற்றும் எலுவன்குளம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள சமூகங்களை சேர்ந்த 1,190 இற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கியதுடன் சமூக நல்வாழ்வுக்கான INSEE ன் நீண்டகால அர்ப்பணிப்பை நிரூபித்தது.
INSEE நிறுவனத்தை பொறுத்தவரை வருடாந்த மருத்துவ முகாம்கள் நிறுவனத்தின் Build for Life எனும் தத்துவத்தின் பிரதிபலிப்பாகும். நிலையான வணிக வளர்ச்சி சமூகப் பொறுப்புடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் INSEE, உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து சமூகங்களுடனான பிணைப்புகளை வலுப்படுத்துகிறது.
இம் மருத்துவ முகாம்கள் ஒரு பொறுப்பான நிறுவனமாக INSEE இன் பங்கையும், இலங்கையில், குறிப்பாக நிறுவனத்தின் தொழிற்சாலைகள் மற்றும் குவாரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. தரமான சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகல் ஊடாக INSEE வாழ்க்கையை மேம்படுத்தவும், சுகாதார அபாயங்களைக் குறைக்கவும், சமூக மேம்பாட்டிற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் உதவுகிறது.
இம் மூன்று மருத்துவ முகாம்களும் OPD ஆலோசனைகள், சிறுவர் பராமரிப்பு, கண் பராமரிப்பு, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், அறுவை சிகிச்சை பராமரிப்பு, புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனை, தோல் மருத்துவம், சிறுநீரக நோய் முகாமைத்துவம் மற்றும் பல் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கின. இந்தப் பகுதிகளில் உள்ள சிரேஷ்ட மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் INSEEஇன் பணியில் தன்னார்வ சேவையை வழங்கினர். INSEE இச் சேவைகளை பின்தங்கிய சமூகங்களுக்கு நேரடியாக வழங்குவதன் மூலம் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலில் உள்ள முக்கியமான இடைவெளிகளை குறைத்து, கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்கள் சரியான நேரத்தில் மருத்துவ கவனிப்பைப் பெற உதவுகிறது.
INSEE ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஆதரவுடன் காலி ஆசிரி மருத்துவமனை மற்றும் புத்தளம் திகசிரி மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. முகாம்களை நன்கு ஒழுங்கமைக்க அவர்களின் ஒன்றிணைந்த முயற்சிகள் உதவின. இதனால் நிலையான மருத்துவ பராமரிப்புக்கு தடைகளை எதிர்கொள்ளும் பலரை சென்றடைய கூடியதாக இருந்தது.

