செய்திகள்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு

Dec 5, 2025 - 06:32 PM -

0

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு

இலங்கையில் சீரற்ற வானிலை ஏற்படுத்திய பாரிய சேதங்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணமும் மீள்கட்டமைப்பும் வழங்குவதற்காக அரசாங்கம் பல்வேறு நிவாரணத் திட்டங்களை அறிவித்துள்ளது. 

இன்று (05) பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனை அறிவித்தார். 

அதன்படி, முழுமையாக சேதமடைந்த ஒவ்வொரு வீட்டுக்கும் புதிய வீடு கட்டுவதற்காக ரூ. 5 மில்லியன் (50 இலட்சம் ரூபா) வழங்கப்படும். 

காணி இல்லாதவர்கள் அல்லது அதி ஆபத்து பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு காணி வழங்க முடியாத பட்சத்தில் ரூ. 5 மில்லியன் வரை பணமாக வழங்கப்படும். 

பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை பழுதுபார்ப்பதற்கு அதிகபட்சம் ரூ. 2.5 இலட்சம் (ரூ. 2.5 மில்லியன்) வழங்கப்படும். 

அத்தியாவசிய வீட்டுப் பொருட்களை வாங்குவதற்கு, உரிமை நிலை பாராது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் ரூ. 50,000 வழங்கப்படும். 

அதேபோல், வீட்டை இழந்து நிவாரண முகாம்களில் தங்க முடியாதவர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் ரூ. 25,000 வாடகை உதவித்தொகை வழங்கப்படும். தேவைக்கேற்ப 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம். 

மேலும், 2 உறுப்பினர்கள் வரையுள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ. 25,000 2க்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு மாதம் ரூ. 50,000 இது 3 மாதங்களுக்கு வழங்கப்படும். 

அதேபோல், பதிவு செய்யப்பட்ட கால்நடை பண்ணைகளுக்கு ரூ. 200,000 

பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ. 200,000 

முழுமையாக சேதமடைந்த மீன்பிடிப் படகுகளுக்கு ரூ. 400,000 

பாதிக்கப்பட்ட வணிக கட்டிடங்களுக்கு அதிகபட்சம் ரூ. 5 மில்லியன் 

நெல், சோளம், தானியப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 150,000 

காய்கறி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 200,000 

2026 ஆம் ஆண்டில் சொத்து வரி விதிக்கப்பட மாட்டாது. 

2027 ஆம் ஆண்டு முதல் மட்டுமே சொத்து வரி அமுல்படுத்தப்படும் என்பதை சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை விரைவாக மீட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்தார். 

இந்த நிவாரணத் திட்டங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05