Dec 5, 2025 - 07:53 PM -
0
நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (05) மாலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, மேலும் 214 பேர் அனர்த்தம் காரணமாகக் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
586,464 குடும்பங்களைச் சேர்ந்த 2,082,195 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 232 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் 89 உயிரழப்புகளும், பதுளை மாவட்டத்தில் 83 உயிரழப்புகளும், குருநாகலையில் 61 உயிரழப்புகளும், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 60 உயிரழப்புகளும், மாத்தளை மாவட்டத்தில் 28 உயிரழப்புகளும், பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 81 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 35 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 41 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 11 பேரும் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
43,715 குடும்பங்களைச் சேர்ந்த 152,537 பேர் இன்னும் தங்குமிடங்களில் தங்கியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

