Dec 8, 2025 - 11:56 AM -
0
விலை அழுத்தம் மற்றும் குறுகியகால வர்த்தக ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிக்கடி முகங்கொடுத்து வருகின்ற ஒரு தொழிற்துறையில், தளம்பல் கொண்ட சந்தைக்கு முகங்கொடுக்கின்ற சமயங்களில் கூட தராதரங்களுக்கு எவ்விதமான குறைவும் ஏற்படாத வகையில் செயற்பட்டு வரும் கீல்ஸ் ஃபூட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிறுவனம், மகத்துவத்திற்கு தொடர்ந்தும் முன்னுரிமையளித்து வருகின்றது. சிறந்த, பாதுகாப்பான, உயர் தரம் கொண்ட தயாரிப்புக்களை சிக்கனமான விலைகளில் நுகர்வோருக்கு வழங்கும் இந்நிறுவனத்தின் நீண்ட கால வாக்குறுதியை இச்சாதனை பிரதிபலிக்கின்றது. கேள்விமிக்க மற்றும் வெகுவேகமாக பரிணமித்து வரும் ஒரு துறையில் போட்டியிடுவதில் இந்நிறுவனத்தின் இடைவிடாத தைரியத்தையும் இது எடுத்துக்காட்டுகின்றது.
உற்பத்திப் பிரிவில் (நடுத்தரம்) ஒட்டுமொத்த நிறுவன மகத்துவத்திற்காக Sri Lanka National Quality Award 2023 என்ற விருதை வென்றுள்ளதன் மூலமாக, இலங்கையில் வசதியான உணவுத் துறையில் தனது தலைமைத்துவ ஸ்தானத்தை கீல்ஸ் ஃபூட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 2025 நவம்பர் 11 அன்று இலங்கை கட்டளைகள் நிறுவனத்தால் (Sri Lanka Standards Institution - SLSI) வழங்கப்பட்ட இவ்விருது, நிறுவனரீதியான ஆற்றல், கலாச்சாரம், மற்றும் பெறுபேறுகள் ஆகிய அனைத்தின் மத்தியிலும் செயல்திறன் மகத்துவத்தில் நாட்டின் அதியுச்ச அங்கீகாரமாகத் திகழ்ந்து வருகின்றது.
1983 ம் ஆண்டில் செயற்பட ஆரம்பித்த கீல்ஸ் ஃபூட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிறுவனம், நாட்டின் முதலாவது, ஒரேயொரு இறைச்சி உற்பத்தி நிறுவனம் என்ற ரீதியில் இலங்கையில் வசதியான உணவுத் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றது. அதனைத் தொடர்ந்து, நவீன செயல்முறை தொழில்நுட்பங்கள், கடுமையான தர முகாமைத்துவ கட்டமைப்புக்கள், மற்றும் சர்வதேசரீதியான இணக்கம் கொண்ட செயல்பாட்டு நடைமுறைகள் ஆகியவற்றின் மூலமாக இத்தொழில்துறையின் தராதரங்களை மென்மேலும் சிறப்பித்து வந்துள்ளது. உணவுப் பாதுகாப்பிற்கான ISO 22000:2018, தர முகாமைத்துவத்திற்கான ISO 9001:2015, தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான ISO 45001:2018 உள்ளிட்ட பல்வேறு தரச்சான்று அங்கீகாரங்கள், மற்றும் பொது மற்றும் GSO திட்டங்களின் கீழ் ஹலால் சான்று அங்கீகாரம் போன்றவை தயாரிப்பின் தூய்மை மற்றும் நேர்மை மீதான அதன் அர்ப்பணிப்பிற்கு மேலும் வலுவூட்டியுள்ளன. இணக்கப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், பல்வேறுபட்ட முக்கிய தயாரிப்பு வகைகளுக்கு SLS தரச்சான்று அங்கீகாரத்தையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.
நவீன தொழில்நுட்பம், ஆராய்ச்சி, மற்றும் மேம்பாடு, மற்றும் நடைமுறையின் உச்சப்பயன்பாடு ஆகியவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முதலீடுகளின் துணையுடன், தொடர்ச்சியான மேம்பாட்டின் மீது கீல்ஸ் ஃபூட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் ஒழுக்கம் நிறைந்த கலாச்சாரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தேசிய தராதர விருதின் வெற்றி காணப்படுகின்றது. தரம் மீதான அதீத அக்கறையுடன் நிறுவனம் மேற்கொண்டு வருகின்ற பயணத்தை சர்வதேச மட்டத்திற்கும் கொண்டு செல்லும் வகையில், ஆசிய பசுபிக் தர நிறுவனம் (Asia Pacific Quality Organization - APQO) ஏற்பாடு செய்யும் சர்வதேச செயல்திறன் மகத்துவத்திற்கான விருதுகளுக்கும் (Global Performance Excellence Awards - GPEA) இலங்கையை பிரதிநிதித்துவம் செய்வதற்கான வாய்ப்பினை ஒட்டுமொத்த நிறுவன மகத்துவத்திற்கான இந்த அங்கீகாரம் அதற்கு வழங்கியுள்ளது.
ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் துறையின் தலைவர் தமிந்த கம்லத் அவர்கள் இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில்,
“தரம் மற்றும் செயல்பாட்டு மகத்துவம் ஆகியவற்றின் மீது கீல்ஸ் ஃபூட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் இடைவிடாத அர்ப்பணிப்பிற்கு வலுவான சான்றாக இவ்விருது காணப்படுகின்றது. எமது உற்பத்தி நடைமுறைகள் மற்றும் நிறுவன கட்டமைப்புக்கள் மத்தியில் அதியுயர் தராதரங்களைப் பேணுவதில் எமது அணிகள் தம்மை அர்ப்பணித்துள்ளதுடன், அவர்களுடைய பெரும் பற்று மற்றும் ஒழுக்கத்தை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது.”
கீல்ஸ் ஃபூட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விரங்க விக்கிரமரத்ன அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “எமது நிறுவனத்திலுள்ள ஒவ்வொருவரினதும் கூட்டு உழைப்பினை தேசிய தராதர விருதின் வெற்றி பிரதிபலிக்கின்றது. GPEA மேடையில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்வதற்கு நாம் தயாராகி வரும் நிலையில், இத்துறையின் தராதரத்தை மென்மேலும் மேம்படுத்துவதற்கு இது எமக்கு உந்துசக்தியளிக்கின்றது.”
மகத்துவம் தொடர்பான தனது பயணத்தை கீல்ஸ் ஃபூட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிறுவனம் தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து வரும் நிலையில், தொழில்நுட்ப ரீதியான ஆற்றல்களை வலுப்படுத்தி, தனது புத்தாக்க வரிசையை விரிவுபடுத்தி, நுகர்வோருக்கான தனது வாக்குறுதியை கட்டிக்காப்பதன் மீது நிறுவனம் தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளதுடன், தரம் என்பது உண்மையிலேயே ஒரு வாழ்க்கை முறை என்பதை கீல்ஸ் ஃபூட் புரொடக்ட்ஸ் பிஎல்சி மீண்டும் நிரூபித்துள்ளது.

