வணிகம்
SLIM Brand Excellence 2025இல் வெள்ளி விருதை சுவீகரித்து First Capital, இலங்கையின் சிறந்த சேவை வர்த்தக நாமங்களில் ஒன்றாக தனது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது

Dec 8, 2025 - 12:14 PM -

0

SLIM Brand Excellence 2025இல் வெள்ளி விருதை சுவீகரித்து First Capital, இலங்கையின் சிறந்த சேவை வர்த்தக நாமங்களில் ஒன்றாக தனது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது

SLIM Brand Excellence விருதுகள் 2025இல் JXG (ஜனசக்தி குழுமம்)இன் முன்னோடி முதலீட்டு நிறுவனமான First Capital Holdings PLC, ஆண்டின் சேவை வர்த்தக நாமத்திற்கான வெள்ளி விருதை வென்றுள்ளது. இவ்விருது வங்கி, தொலைத்தொடர்பு, காப்புறுதி மற்றும் ஊடகம் ஆகிய துறைகளுக்கு மத்தியில் தனித்து விளங்கும் சேவைக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச் சாதனை, நிறுவனம் தனது வர்த்தக நாமம் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது கொண்டுள்ள வலுவான அர்ப்பணிப்பிற்கு சான்றாகும். 2024ஆம் ஆண்டில் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் என்ற அங்கீகாரத்தை தொடர்ந்து, First Capital மூலோபாய வழிநடத்தல், நெறிமுறையான செயல்படுத்தல் மற்றும் நோக்கத்துடனான அணுகுமுறை ஊடாக அதன் வெற்றியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

பேரின பொருளாதார மாற்றங்கள் மற்றும் கொள்கை சார்ந்த மாற்றங்கள் ஆகியவற்றை தழுவிய துறையில் செயல்படும் First Capital, அர்த்தமுள்ள நிதி தீர்வுகள் மூலம் அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் தெளிவான தேசிய தொலைநோக்குப் பார்வையை கொண்டுள்ளது. இத் தொலைநோக்குப் பார்வை நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட நிதி ஸ்திரத்தன்மை மற்றும் wealth உருவாக்கத்திற்கு பங்களிக்கும் அதே வேளையில் மிகப் பெரிய சேவை நிறுவனங்களுக்கிடையில் நம்பிக்கையுடன் போட்டியிடும் வகையில் வர்த்தக நாமத்தை நிலைநிறுத்தியுள்ளது. 

ஒரு வர்த்தக நாமமாக நாங்கள் எடுத்த நீண்டகால முடிவுகளின் சரிபார்ப்பாக இந்த அங்கீகாரத்தை நாங்கள் பார்க்கிறோம். நாட்டின் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் சேவை நிறுவனங்களுக்கிடையில் போட்டியிட்டு வெள்ளி விருதை சுவீகரிப்பது தெளிவான நோக்கத்துடனான சீரான செயற்பாடு எவ்வாறு நீடித்த வர்த்தக நாம வலிமையை உருவாக்குகின்றது என்பதைப் பிரதிபலிக்கிறது. என First Capital Holdings PLCயின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி டில்ஷான் வீரசேகர குறிப்பிட்டார். 

இச் சாதனை பற்றி JXG (ஜனசக்தி குழுமம்)இன் குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி காமிக டி சில்வா பேசுகையில் இந்த வெற்றி வர்த்தக நாம வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள ஒழுங்கு முறையை நிரூபிக்கிறது என்று கூறினார். அவர் மேலும், இங்கே விருதை தாண்டி அது, நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் வர்த்தக நாம உத்தியின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றது. First Capitalஇல் நாங்கள் எமது நோக்கத்தில் கவனம் செலுத்தி அதை பின்பற்றியதால், முக்கிய தொழில்துறை வர்த்தக நாமங்களுக்கு மத்தியிலும் தனித்து விளங்கக் கூடியதாக இருந்தது. எங்களைப் பொறுத்தவரை வர்த்தக நாமம் என்பது உத்தி மற்றும் தகவல்தொடர்புடன் மட்டும் நின்றுவிடவில்லை, அது நாம் செய்யும் எல்லாவற்றிலும், அதை எவ்வாறு செய்கிறோம் என்பதிலும் பொதிந்துள்ளது. அதுதான் எங்கள் வெற்றிக்கான திறவுகோல்.” என்றார். 

வர்த்தக நாமத்தின் தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்த தனது எண்ணத்தை பகிர்ந்து கொண்ட First Capital Holdings PLCயின் துணைப் பொது முகாமையாளர்/ சந்தைப்படுத்தல் தலைவர் ரந்தினித் மதநாயக்க மேலும் கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை நோக்கமே செயல்களை முன்னெடுக்கச் செய்கிறது. அதுவே வர்த்தக நாமத்தை உருவாக்கும் முறைக்கும் அதை செயல்படுத்தும் அணுகுமுறைக்கும் பின்னால் இருக்கும் மனநிலை. இந்த அங்கீகாரம் எங்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையையும் நிதி தீர்வுகள் மூலம் இலங்கையர்களுக்கு நாங்கள் உருவாக்க விரும்பும் நேர்மறையான மாற்றத்தையும் உறுதிப்படுத்துகிறது. என்றார். 

ஆலோசனை தலைமையிலான தீர்வுகள், மூலோபாய வர்த்தக நாம கட்டமைப்பு மற்றும் நிலையான செயல்திறன் மூலம் First Capital முதலீட்டு நிலப்பரப்பை தொடர்ந்து வலுப்படுத்துகிறது. இவ் வெள்ளி விருது, SLIM Brand Excellence 2024இல் பெற்ற பல அங்கீகாரங்கள் மற்றும் அதன் சிறப்புமிக்க ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் ஆகிய விருதுகள் உட்பட அதன் வளர்ந்து வரும் சாதனைகளின் பட்டியலில் சேர்க்கிறது. 

தற்போது 24ஆவது ஆண்டாக நடைபெறும் SLIM Brand Excellence விருதுகள் மூலோபாய தொலைநோக்கு பார்வை, தொழில்துறை செல்வாக்கு மற்றும் வலுவான சந்தை தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் வர்த்தக நாமங்களை கௌரவிக்கிறது. First Capitalஇன் தொடர்ச்சியான அங்கீகாரம் தேசத்திற்கான நோக்கமுள்ள, இணக்கமுள்ள மற்றும் செயல்திறன் சார்ந்த வர்த்தக நாமத்தை வடிவமைப்பதில் அதன் பங்கை அங்கீகரிக்கிறது. 

First Capital Holdings PLC பற்றி 

இலங்கையில் காணப்படும் பட்டியலிடப்பட்ட முழு-சேவை முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்வதுடன், பிரதான வணிகர், கூட்டாண்மை நிதி ஆலோசகர், வெல்த் முகாமையாளர் மற்றும் பங்குமுகவராக இயங்குகின்றது. உறுதித்தன்மையை கட்டியெழுப்புவது, போட்டிகரமான அனுகூலத்தை ஊக்குவிப்பது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது போன்றவற்றில் உறுதியான கவனத்தை செலுத்துவதுடன், ஜனசக்தி குழுமத்தின் ஆதரவுடன், First Capital, செயலாற்றுகை முதலில் எனும் தனது கோட்பாட்டுக்கமைய திகழ்வதில் கவனம் செலுத்துகின்றது. தொடர்ச்சியாக இரண்டு வருட காலமாக முதலீட்டு வங்கியியல் துறையில் மிகவும் பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமமாக First Capital கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. SLIM வர்த்தகநாம சிறப்புகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம்” எனும் உயர்ந்த கௌரவிப்பையும் First Capital பெற்றுள்ளது. First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC (துணை நிறுவனம்) ஆகியவற்றின் கடன் மதிப்பீடுகளை லங்கா கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி லிமிடெட் (LRA), “A” யிலிருந்து “A+” ஆக மேம்படுத்தி, கண்ணோட்டம் Positive இல் இருந்து Stable ஆக மாற்றப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05