Dec 8, 2025 - 12:25 PM -
0
பரிஸ்டா தொடர்ந்து 6 ஆவது வருடமாக SOS Children’s Villages Sri Lanka (SOSCVSL) உடன் இணைந்து தனது வருடாந்த ‘Share A Meal’ நத்தார் முன்னெடுப்பை ஆரம்பித்தது. தமக்கு இடையிலான நீண்டகால உறவை மீண்டும் உறுதி செய்தவாறு SOSCVSL இனது பாதுகாப்பின் கீழுள்ள சிறுவர்களின் அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் இந்த முயற்சியின் நோக்கத்தைக் கொண்டாடும் விதமாக 2025 நவம்பர் 24 நுகேகொட பரிஸ்டா கிளையில் இதன் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.
‘Share A Meal’ முன்னெடுப்பானது கடந்த 6 ஆண்டுகளாக நாடெங்கும் SOSCVSL இனது பராமரிப்பின் கீழுள்ள 6 கிராமங்களையும் சேர்ந்த கிட்டத்தட்ட 750 சிறுவர்களைப் பராமரித்து வருகிறது. பண்டிகைக்கால நல்லெண்ணங்களை வெளிப்படுத்தியவாறு இந்த முன்னெடுப்பானது 2025 டிசம்பர் 1 முதல் 31 வரை இடம்பெற இருப்பதோடு இலங்கை முழுவதுமுள்ள எந்தவொரு பரிஸ்டா கிளைக்கும் வருகை தருபவர்கள் ‘Share A Meal’ கூப்பன்களைப் பெற்று ஒரு பிள்ளைக்கு மூன்று வேளை போஷாக்கான உணவை சாதாரண கட்டணத்தில் பெற்றுக்கொடுக்க உதவுகிறது. இலங்கை முழுவதுமுள்ள பரிஸ்டா கிளைகளில் அமைந்துள்ள உண்டியல் பெட்டிகள் இந்த முயற்சிக்கு உதவுகின்றன. மேலும் பரிஸ்டாவின் நத்தார் மெனுவிலிருந்து பெறப்படும் விசேட பொருட்களின் வருமானத்தில் 10% ஆனது SOSCVSL இனது பராமரிப்பில் உள்ள சிறுவர்களது நலனுக்காக அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மேலும் வலுவூட்டுவதற்காக வழங்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பின் நிறைவாக பரிஸ்டா தனது இளையோர் உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் ஊடாக SOSCVSL இனது இளையோருக்கு உடனடி நேரடிப் பயிற்சி மற்றும் தொழில் அனுபவத்தையும் பெற்றுத்தந்தது.
இது பற்றி கருத்து தெரிவித்த SOS சிறுவர் கிராமங்களின் துணை தேசிய பணிப்பாளர் தனஞ்சய பெரேரா 'எமது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரும் அனுபவங்களை பெற்றுக்கொடுப்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். பரிஸ்டாவுடனான எங்கள் உறவானது அவர்கள் வளரும்போது நத்தார் காலத்தின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூர வழி செய்கிறது. மேலும்ரூபவ் பொதுவான நலனுக்காக நாம் ஒன்றிணைந்து செயற்படும்போது சிறப்பான மற்றும் உறுதியான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதையும் இந்த முயற்சி நிரூபிக்கிறது' எனத் தெரிவித்தார்.
பரிஸ்டா கொஃபி லங்கா (பிரைவட்) லிமிட்டட் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திலுப பத்திரன மேலும் தெரிவிக்கையில் பரிஸ்டாவை பொறுத்தவரை Share A Meal என்பது எமது சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அத்தோடு தொடர்ச்சியாக ஆறு வருடங்களை நிறைவு செய்திருப்பது நாம் சேவை வழங்கும் சமூகங்களை ஆதரிப்பதில் நாம் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது. SOS சிறுவர் கிராமங்களுடனான எமது பங்காண்மை நாடு முழுவதுமுள்ள சிறுவர்கள் மற்றும் குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் விருத்திக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வழி செய்கிறது. இந்த வருடம் இந்த முயற்சியின் தாக்கத்தையும் வீச்சையும் மேலும் வலுப்படுத்த 5 மில்லியன் ரூபாவை திரட்டுவதை நாம் இலக்காக நிர்ணயித்துள்ளோம். ஒவ்வொரு வருடமும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க எங்களுக்கு உதவும் அனைத்து பங்காளர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை நாம் பெரிதும் பாராட்டுகிறோம்.' என்று கூறினார்.
SOS சிறுவர் கிராமங்கள் 1981 முதல் நான்கு தசாப்தங்களுக்கும் அதிக காலமாக குடும்பத்தைப் போன்ற பராமரிப்பை சிறுவர்களுக்கு வழங்கி வருகின்றன. நாடு முழுவதும் 6 இடங்களில் அமைந்துள்ள SOS சிறுவர் கிராமங்கள் பிலியந்தலை நுவரெலியா காலி அனுராதபுரம் மொனராகலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலுள்ள தனது 72 குடும்ப இல்லங்களின் ஊடாக பெற்றோரின் பராமரிப்பை இழந்த அல்லது இழக்கும் அபாயத்தில் உள்ள பிள்ளைகளுக்கு அன்பான இல்லங்கள் மற்றும் குடும்பத்தை போன்ற பராமரிப்பை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.

