Dec 8, 2025 - 02:45 PM -
0
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, தனது 44 வருட பூர்த்தியை, கொழும்பு 10, சென். மேரிஸ் முதியோர் இல்லத்தில் “வலிமையை கொண்டாடுதல். அன்பை பகிர்தல்” எனும் அர்த்தமுள்ள சமூக செயற்திட்டத்துடன் கொண்டாடியது. சிரேஷ்ட பிரஜைகள் தமது வாழ்நாளில் வழங்கிய பங்களிப்புகளை கௌரவித்து, அவர்களின் வலிமை, அனுபவம் மற்றும் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நிறுவனத்தின் ESG (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம்) கட்டமைப்புடன் கீழ் சமூகப் பொறுப்புணர்வுக்கான உறுதிப்பாட்டின் வழிகாட்டலுக்கு அமைவாக, இவ் ஆண்டு கொண்டாட்டமானது ஒரு நிறுவனம் தனது முக்கிய மைல்கல்லை நினைவுகூர்வதற்கு அப்பாற்பட்டதாக அமைந்திருந்தது. அது, தயாளகுணம் மற்றும் உள்வாங்கல் ஊடாக வாழ்வை வளப்படுத்தி சமூகங்களை ஊக்குவிக்கும் ஜனசக்தி பைனான்ஸின் நோக்கமுள்ள பயணத்தைப் பிரதிபலித்தது.
இத் திட்டம் தொடர்பில் ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் கருத்து தெரிவிக்கையில், “எமது 44 வருடப் பூர்த்தி கொண்டாட்டங்களின் அங்கமாக, எமது சாதனைகளை நினைவு கூர்வது மட்டுமன்றி, பல தலைமுறைகளாக அதற்கான பாதையை உருவாக்கித் தந்தவர்களுக்கு உதவுவதற்கும் எதிர்பார்த்தோம். “வலிமையை கொண்டாடுதல். அன்பை பகிர்தல்” என்பதனூடாக, நாம் சேவையாற்றும் சமூகங்களில் வலிமை, அரவணைப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றுக்கான ஒரு ஆதாரமாக இருப்பதற்கான எமது அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது.” என்றார்.
இந் நிகழ்வு, ஜனசக்தி பைனான்ஸின் தலைமைத்துவ அணியினர், ஊழியர்கள் மற்றும் சென். மேரிஸ் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள் இணைந்து கொண்ட அர்த்தமுள்ள மதியப் பொழுதாக அமைந்தது. இந் நிகழ்வில் பராமரிப்பு பொதிகளின் நன்கொடை, இசை நிகழ்ச்சிகள் மற்றும் மனதிற்கினிய மகிழ்வான தருணங்களை வழங்கிய பங்கேற்பு செயற்பாடுகளும் இடம் பெற்றன.
நிறுவனத்தின் கலாசாரத்தில் இணைந்திருக்கும் ஒற்றுமை மற்றும் கருணையை இம் முன்னெடுப்பு பிரதிபலித்ததோடு நிறுவனத்தின் ESG பயணத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதாகவும் குறிப்பாக உள்வாங்கலை வளர்த்து சமூகங்களை அரவணைத்து இதன் சமூக அங்கத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இந்த முன்னெடுப்பின் மூலம் சிரேஷ்ட பிரஜைகளை கொண்டாடியதனூடாக, வெற்றி என்பது நிதிசார் வளர்ச்சிக்கு அப்பாற்பட்டு சமூகத்தினுள் நல்ல விதமான மாற்றத்தை ஏற்படுத்துவதிலேயே அது தங்கியுள்ளது என்பதை ஜனசக்தி பைனான்ஸ் மீண்டும் உறுதி செய்தது. “பகிர்ந்திடும் போதே வலிமை அதிகரிக்கும்” என்பதை உணர்த்தும் ஒரு மனப்பூர்வமான ஒரு நினைவூட்டலாக இச் செயற்திட்டம் அமைந்திருந்ததுடன், நிறுவனத்தினால் மாற்றம் பெறும் வாழ்வுகள் மற்றும் வளர்ச்சியடையும் சமூகங்களின் ஊடாகவே உண்மையான முன்னேற்றம் கணிப்பிடப்படும் எனும் நிறுவனத்தின் நம்பிக்கையையும் பிரதிபலித்தது.
ஜனசக்தி பைனான்ஸ் தனது வளர்ச்சி மற்றும் முழுமையான மாற்றத்தை நோக்கிய பயணத்தை தொடரும்போது, “வலிமையை கொண்டாடுதல். அன்பை பகிர்தல்” போன்ற முன்னெடுப்புக்கள் நிறுவனத்தின் காருண்யத்தை அடிப்படையாக கொண்ட வரலாற்றுக்கும் இலங்கை சமூகங்களை ஊக்குவிக்கும் நோக்கத்திற்கும் வலிமை சேர்ப்பதாக அமைகின்றன.
ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது) JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், குத்தகை (லீசிங்), தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிச்சேவை உட்பட பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. நிறுவனம் 44 வருட கால உறுதித் தன்மை, வலிமை, நம்பிக்கை மற்றும் நிபுணத்துவதும் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச் சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, தன்னிகரற்ற தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனம் என்பதோடு LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.

