Dec 8, 2025 - 02:53 PM -
0
இலங்கையின் முன்னணி மக்கள் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு நிறுவனமான Mark and Comm, 2025 ஆம் ஆண்டுக்கான Campaign இன் ஆண்டின் சிறந்த முகவர் நிறுவனம் (Agency of the Year) விருதுகளில் (தெற்காசியா) விருதை சுவீகரித்துள்ளது. வெள்ளி விருதை வென்றதுடன், தெற்காசியாவின் எஞ்சிய பிராந்தியத்தின் சிறந்த மக்கள் தொடர்பு நிறுவனம் (Rest of South Asia PR Agency of the Year) பிரிவில் தெரிவான ஒரே நிறுவனமாகவும் Mark and Comm திகழ்கிறது. விருது வழங்கும் விழா டிசம்பர் 2 ஆம் திகதி மும்பையில் உள்ள ITC Marathaஇல் நடைபெற்றது.
Campaign Asia-Pacific Agency of the Year விருதுகள், விளம்பரம், சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புகளில் சிறந்து விளங்குவதற்கான பிராந்தியத்தின் மிகவும் மதிப்புமிக்க அங்கீகாரமாகும். முன்னணி வாடிக்கையாளர் சந்தைப்படுத்துபவர்களால் இந்த விருதுகள் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும், படைப்பாற்றல், ஊடகம், டிஜிட்டல், மக்கள் தொடர்பு மற்றும் சிறப்புப் பிரிவுகள் என அனைத்திலும் உள்ள சிறந்த சாதனைகளைக் கௌரவிக்கின்றன.
Mark and Comm இன் முகாமைத்துவ பணிப்பாளர் தன்சில் தாஜுதீன் இந்த விருதை சுவீகரித்தமை தொடர்பில் தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரம், எங்கள் வாடிக்கையாளர்களுக்காக உண்மையான பலன்களை ஈட்டித் தரும் மக்கள் தொடர்பு சார்ந்த (PR-led) வியூகங்களை வழங்குவதில் எங்கள் குழுவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்குக் கிடைத்த சான்றாகும். இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட குறும்பட்டியலில் அங்கம்பெற்ற ஒரே நிறுவனமாகத் திகழ்வது, நாங்கள் முன்னெடுக்கும் பணிகளின் தரத்தைப் பற்றிப் பல தகவல்களை வெளிப்படுத்துவதுடன், பல்வேறு பார்வையாளர்களின் மனதைக் கவரும் உண்மையான தொடர்புகளை நாங்கள் உருவாக்குகிறோம். என்றார்.
2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Mark and Comm, தொழில்நுட்பம், விவசாயம், ஆடை, துரிதமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG), நிதி மற்றும் காப்பீடு, விருந்தோம்பல், கல்வி, போக்குவரத்து (Mobility) மற்றும் நிலைத்தன்மை (Sustainability) ஆகிய துறைகளில் உள்ள முன்னணி உள்ளூர் மற்றும் பல்தேசிய நிறுவனங்களுக்கான ஒரு மூலோபாய மக்கள் தொடர்பு ஆலோசனைக் குழுவாக (Strategic PR consultancy) வளர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் Boutique model, மூலோபாய ஆலோசனை மற்றும் சுறுசுறுப்பான செயல்பாட்டை (agile execution) வலியுறுத்துகிறது. மேலும், இது ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு தீர்வுகளை (integrated communications solutions) வழங்குகிறது.
Mark and Comm நிறுவனத்தின் உலகளாவிய சென்றடைவு, மூலோபாய சர்வதேசப் பிணைப்புகள் மூலம் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் GlobalCom PR Network இல் உறுப்பினராக உள்ளது. இது உலகளவில் 100 நாடுகளுக்கு மேல் இயங்கும் 80க்கும் மேற்பட்ட சுயாதீன மக்கள் தொடர்பு நிறுவனங்களை இணைக்கிறது. கூடுதலாக, இந்த நிறுவனம் இரண்டு முன்னணி உலகளாவிய மக்கள் தொடர்பு நிறுவனங்களுடன் பிரத்தியேகமற்ற பிணைப்புகளை (non-exclusive affiliations) கொண்டுள்ளது. மேலும், இது PRCA APAC நிறுவனத்தின் கூட்டு நிறுவன உறுப்பினராகும். இதில் தாஜுதீன், PRCA APAC குழுவிலும் மற்றும் CIPR சர்வதேசக் குழுவிலும் அங்கம் பெற்றுள்ளார்.
Mark and Comm நிறுவனம், சமீபத்தில் Hootsuite மற்றும் Talkwalker தளங்களுக்காக, இலங்கை மற்றும் மாலைதீவுகளில் பிரத்தியேக மறுவிற்பனையாளர் மற்றும் விநியோகஸ்தராகவும் நியமிக்கப்பட்டுள்ளது. இத் தளங்கள், இந்த துரிதமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் சந்தைகளுக்கு நிறுவன-நிலை சமூகத்தைக் கண்காணிக்கும், ஊடகத்தைக் கண்காணிக்கும், மற்றும் சமூக ஊடக நிர்வாகத் தீர்வுகளை கொண்டு வருகின்றன. இதன் மூலம், இந்த பிராந்தியத்தில் டிஜிட்டல் நுண்ணறிவுத் தீர்வுகளின் முன்னணியில் Mark and Comm நிறுவனம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையெங்கும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத் தொழில்துறையின் தரத்தை உயர்த்துவதில் இந்த நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது. இதில், Women in Tech Sri Lanka மற்றும் ZeroPlastic Movement ஆகியவற்றுக்கான மூலோபாய தகவல் தொடர்புப் பங்காளராக கட்டணமில்லா கூட்டாண்மைகளும் அடங்கும்.
இந்த விருது, எல்லைகளை மேலும் விரிவாக்க எங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது, என Mark and Comm நிறுவனத்தின் இயக்குநர் சாமனி நாணயக்கார கூறினார். மூலோபாயச் சிறப்புடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவதுடன், நோக்கம் சார்ந்த கூட்டாண்மைகள் மூலம் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்குவதன் மூலம், Mark and Comm நிறுவனத்தை உலகளாவிய நிலைக்குக் கொண்டு செல்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம், என்றும் அவர் குறிப்பிட்டார்.

