Dec 8, 2025 - 03:13 PM -
0
நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதை போன்று மக்களை ஏமாற்றாது இழப்பீட்டு தொகையை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (08) கொத்மலை இறம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தையும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,
இந்த அனர்த்தம் காரணமாக அனேகமான மக்கள் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை முறையான வீடுகளை அமைத்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது பேச உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொதமலை பகுதிக்கு சென்ற நாமல் ராஜபக்ச அம்பதலாவ விகாரைக்கு சென்று விகாராதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.
--

