Dec 8, 2025 - 03:40 PM -
0
சீரற்ற வானிலை காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் மாவட்டத்தில் நேற்று (07) காலை வரையிலான கணக்கெடுப்பின் படி, 534 கிராம சேவகர் பிரிவுகளில் 98,146 குடும்பங்களைச் சேர்ந்த 349,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்தார்.
சிலாபம் பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு 49 கிராம சேவகர் பிரிவுகளில் 17,297 குடும்பங்களைச் சேர்ந்த 68,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாதம்பை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 47 கிராம சேவகர் பிரிவுகளில் 4,598 குடும்பங்களைச் சேர்ந்த 15,916 பேரும், மஹாவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 47 கிராம சேவகர் பிரிவுகளில் 1,658 குடும்பங்களைச் சேர்ந்த 5703 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 34 கிராம சேவகர் பிரிவுகளில் 13,415 குடும்பங்களைச் சேர்ந்த 32,220 பேரும், வென்னப்புவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 52 கிராம சேவகர் பிரிவுகளில் 5,015 குடும்பங்களைச் சேர்ந்த 15,589 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வன்னாத்தவில்லு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளில் 3,086 குடும்பங்களைச் சேர்ந்த 11,218 பேரும், புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளில் 14,102 குடும்பங்களைச் சேர்ந்த 49,830 பேரும், கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 29 கிராம சேவகர் பிரிவுகளில் 9,387 குடும்பங்களைச் சேர்ந்த 37,531 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனமடுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 35 கிராம சேவகர் பிரிவுகளில் 343 குடும்பங்களைச் சேர்ந்த 1,141 பேரும், நவகத்தேகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவுகளில் 425 குடும்பங்களைச் சேர்ந்த 1,300 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 40 கிராம சேவகர் பிரிவுகளில் 2,580 குடும்பங்களைச் சேர்ந்த 8,206 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 25 கிராம சேவகர் பிரிவுகளில் 467 குடும்பங்களைச் சேர்ந்த 1,452 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 25 கிராம சேவகர் பிரிவுகளில் 1,269 குடும்பங்களைச் சேர்ந்த 3,771 பேரும், முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவகர் பிரிவுகளில் 17,551 குடும்பங்களைச் சேர்ந்த 66,365 பேரும், பல்லம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளில் 1,161 குடும்பங்களைச் சேர்ந்த 4,747 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 46 கிராம சேவகர் பிரிவுகளில் 5,792 குடும்பங்களைச் சேர்ந்த 26,098 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா கூறினார்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 415 வீடுகள் வெள்ளத்தினால் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 4,809 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக புத்தளம் மாவட்டத்தில் 17 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 121 குடும்பங்களைச் சேர்ந்த 388 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் சொன்னார்.
இவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான சமைத்த உணவு, குடிநீர் மற்றும் வைத்திய சேவைகள் என்பன முப்படையினர் மற்றும் அரச திணைக்கள ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அந்தந்த பிரதேச செயலாளர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் மேலும் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்தார்.
--

