சினிமா
எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பு!

Dec 8, 2025 - 04:15 PM -

0

எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். ஆரம்பத்தில் அது பற்றி பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் படத்தை பார்த்த பின் நெட்டிசன்கள் அமீர்கானை ட்ரோல் தான் செய்தனர். இப்படி ஒரு ரோலில் அவர் ஏன் நடிக்க ஒப்புக் கொண்டார் எனவும் பலரும் கமெண்ட் செய்தனர். 

அந்த படத்திற்கு பிறகு லோகேஷ் உடன் அமீர்கான் ஒரு தனி படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படம் ட்ராப் ஆனதாக தகவல் வெளியாகி இருந்தது. மறுபுறம் லோகேஷ் கனகராஜ் தான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக சென்று விட்டார். 

அடுத்து அவர் கைதி இரண்டாம் பாகம் இயக்கப் போகிறார் என்னும் தகவல் கூட வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது அமீர்கான் அளித்த பேட்டியில் லோகேஷ் உடன் தான் தற்போதும் பேசிக் கொண்டுதான் இருப்பதாகவும், அந்த படம் இன்னும் டிராப் ஆகவில்லை எனவும் கூறியிருக்கிறார். 

"லோகேஷ் உடன் சந்திப்பு இந்நேரம் நடந்திருக்க வேண்டும். அவர் கூடிய விரைவில் மும்பைக்கு வந்து கதை சொல்வதாக கூறியிருக்கிறார். அதனால் படம் தற்போது உயிருடன் தான் இருக்கிறது, டிராப் எல்லாம் ஆகவில்லை" என அமீர்கான் தெரிவித்து இருக்கிறார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05