Dec 9, 2025 - 01:05 PM -
0
கிழக்கு கொங்கோவில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெடிப்புச் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு கொங்கோவில் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 100 கிளர்ச்சியாளர்களை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

